பார் அவர்தான் வீரமணி
ஜாதி பார்பனனை
வர்ண பிராமணன் ஆக்காத
சுயமரியாதை இயக்க
நூற்றாண்டின்
வெற்றியவர் வீரமணி !
வருணம் பீடித்திருக்கும்
ஜாதி வகைமைகளை
சாஸ்திரக் கூட்டம்
புதுப்பிக்க நினைத்தால்
அடியோடு சாய்க்கும்
பெரியார் கூட்டம்
படைகட்டி நிறுத்தும்
தலைவர் வீரமணி !
திராவிடர் போர்முரசு
முழங்கும் திசையெல்லாம்
ஆரிய இன எதிர்ப்பின்
முகம் காட்டும்
ஆசிரியர் அவர் வீரமணி !
நீதிக்கட்சி,வைக்கம்,
சுயமரியை இயக்கம்
நூற்றாண்டு தொடக்கமெல்லாம்
வாழும் காலத்தே
கொண்டாடும்
கருஞ்சட்டை வரலாறு வீரமணி !
பாசிச புல்டோசர் இடிப்பில்
அரசமைப்பின்
தூண்கள் எல்லாம்
சிக்கிச் சாயும்போது
கம்பீரம் காட்டும்
69 % சமூகநீதி பிரிவின்
அடையாளம் அவர் வீரமணி !
நாடு கடந்து
புகழ் திசை எட்டும்
திராவிடமாடல்
திட்டங்கள் வகுப்பதிலும்
தடுமாற்றங்கள் குறிப்பதிலும்
தேடும் ஆவணம் அவர்,
விடுதலையின்
ஆசிரியர் வீரமணி !
இடவொதுக்கீட்டின்
உச்சவரம்பை உயர்த்துங்கள்
எல்லோருக்கும் சமநீதி பகிர
சாதிவாரி கணக்கெடுப்பை
நடத்துங்கள்
ஒருமித்து ஒலிக்கும்
இந்தியா கூட்டணியின் குரல்
நிறைவேறும் பொழுதில்
நாடாளுமன்றம் மீண்டும்
சிந்தாபாத் சொல்லும்
இடவொதுக்கீட்டின்
நாயகர் வீரமணி !
நாய்க்கும் பன்றிக்கும்
இல்லாத பேதம்
மனிதர்க்குப் பார்ப்பது
கடவுளென்றால்
துணிவெளுக்கும் கல்தானே !
பெரியார் ராமசாமியின்
கேள்விக் கிளர்ச்சியால்
திறந்த வைக்கம் வீதிகள்
ஒரு நூறாம் ஆண்டில்
கருஞ்சட்டைப் படைகொண்டு
நிறைக்கும்
முழுமையவர் வீரமணி !
ஈரோட்டு வெண்தாடி
வீரநடை அசைவில் உண்டு
கண்டிக்கும் கைத்தடி
தோள் துண்டாய் தவழ்வதுண்டு
சூத்திரர் இழிவு நீங்க
பெரியார் உடல் சுமந்த
கருப்புச்சட்டை
பணிமுடிக்கும் களத்தில்
இந்நாளும் பார்ப்பதுண்டு
பெரியார் மண்டைச் சுரப்பை
உலகுதொழ
தமைதந்து உழைக்கும்
தலைவர் அவர் வீரமணி
எந்நாளும் எம்முடன் உண்டு.