வைக்கம் வீரருக்கு வாழ்த்துப் பாடும் நாளேடுகள்
முகப்புப் பகுதியில் முத்தாய்ப்பாய் தந்தை பெரியார்
தினத்தந்தியில்… தினகரனில்…!
முரசு கொட்டும் முரசொலியில்…!
ஆங்கில நாளேடுகளில்… அப்பப்பா என்ன சொல்ல!
அது மட்டுமா?
ஊடகங்கள் ஒவ்வொன்றும்
உன்னதமாய் உரைத்தனவே…!
தினம்தினம் வெறுப்பூதும்
தினமலரும் முகப்பக்கம் பதித்ததுவே!!
உலகி(ன்)ல் – தவிர்க்க முடியாத் தலைவரல்லவா
தந்தை பெரியார்!
– கே.பாண்டுரங்கன்