திருநெல்வேலி, டிச. 13- திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 92ஆவது பிறந்தநாள் – கொள்கைக் குடும்ப விழா, வாழ்வியல் சிந்தனைகள் 18 ஆம்பாகம்நூல் வெளியீட்டு விழா பேரூராட்சி மண்டபத்தில் எழுச்சியுடன் நடைபெற்றது.
ஒரு கிலோமீட்டர் தூரம் திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழக கொடிகள் பட்டொளி வீசி பறந்தன.
விழாவிற்கு நெல்லை மாநகர மகளிர் அணி தலைவர் வே.முத்துலட்சுமி தலைமை வகித்தார்
வீரவநல்லூர் மகளிர் பாசறை தலைவர் த. வள்ளி அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்
நிகழ்வில் “விடுதலையின் வீர வரலாறு” என்ற தலைப்பில் மாவட்ட கழகத் தலைவர் ச. இராசேந்திரன், “உண்மை இதழ் உணர்த்தும் பாடம்”என்ற தலைப்பில் மாவட்ட கழகச் செயலாளர் இரா. வேல்முருகன் ஆகியோர் கருத்துரை வழங் கினார்கள்.
தந்தை பெரியார் படத்தினை திறந்து வைத்து பெரியார் வீர விளையாட்டு கழகத் தலைவர் பேரா.ப.சுப்பிரமணியம், அன்னை மணியம்மையார் படத்தினை திறந்து வைத்து மாநில மகளிரணிச் செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி ஆகியோர் உரை நிகழ்த்தினர்.
வாழ்வியல் சிந்தனைகள்
வாழ்வியல் சிந்தனைகள் 18- ஆம் பாகத்தினை அறிமுகம் செய்து மேனாள் சட்டப்பேரவை தலைவர், திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் இரா. ஆவுடையப்பன் சிறப்பாக உரையாற்றினார்.
தந்தை பெரியாரின் கொள் கைகள் முழுமையாக நிறைவேறிட திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர் தகைசால் தமிழர், நமது ஆசிரியர் நூற்றாண்டை கடந்து வாழ வேண்டுமென உளமாற வாழ்த்துகிறேன் .விடு தலை நாளேட்டில் தொடர்ந்து எழுதி வரும் வாழ்வியல் சிந்தனைகளை தொடர்ந்து படித்து வருகிறேன் .அனைவரும் வாங்கி படிக்க வேண்டும்.
1929 ஆம் ஆண்டு சுயமரி யாதை இயக்க மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங் கள்தான் ஒடுக்கப்பட்ட, பிற் படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் கல்வியில் வேலை வாய்ப்பில் சமூகத்தின் அனைத் துத் துறைகளிலும் சம உரிமை யோடு உயர்ந்திருப்பதற்கு காரண மாகும்.
பெரியாரின் சிந்தனைகளை அப்படியே அறிஞர் அண்ணாவும், முத்தமிழ் அறிஞர் கலைஞரும் திமுக ஆட்சியின் மூலம் சட்டங் களாக, திட்டங்களாக நிறைவேற்றி தந்தார்கள்.
அதன்வழி வழியாகத்தான் சமூக நீதியின் சரித்திர நாயகர் என்று ஆசிரியர் அவர்களால் உச்சி முகர்ந்து பாராட்டப்பெற்ற தமிழ்நாடு முதலமைச்சர் தந்தை பெரியாருக்கு பெருமை சேர்த்து வருகிறார். அதற்கு அடிப்படையாக திகழ்வது நமது ஆசிரியர் பெரு மகனாரின் பேருழைப்பு என்பதை பெருமையோடு குறிப்பிடுகிறேன்
நாம் பெற்றிருக்கும் உரிமைகள் காப்பாற்றப்பட ,திராவிட இயக்கம் மேன்மேலும் உயர்வடைய நமது ஆசிரியர் நல்ல உடல் நலத்தோடு வாழ வேண்டும் என திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் வாழ்த்தி விடைபெறுகிறேன் என்று மனம் நெகிழ்ந்து உரை நிகழ்த்தினார்.
தொடர்ந்து மாநில விவசாய தொழிலாளர் அணி துணைச் செயலாளர் கணேஷ் குமார் ஆதித்தன் வீரவநல்லூர் நகர திமுக செயலாளர் வீ.சுப்பையா, பேரூராட்சி மன்றத் தலைவர் சு.சுசித்ரா, பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் பா.வசந்த சந்திரா, சேரன்மகாதேவி ஒன்றிய திமுக செயலாளர் முத்துப்பாண்டி பிரபு ,ஆகியோர் நூலினைபெற்றுக்கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
நிறைவாக கழகத் துணைப் பொதுச் செயலாளர் வழக் குரைஞர் சே.மெ. மதிவதனி அறிவாசான் தந்தை பெரியார் வகுத்தளித்த கொள்கை சிறப் பினையும், ஆசிரியர் அவர்களின் வியக்கத்தக்க தொண்டினையும், சென்னையில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவில் 2026இல் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி தொடரவேண்டியதற்கு தோழர்கள் எத்தகைய களப்பணியை மேற்கொள்ள வேண்டுமென தமிழர் தலைவர் விடுத்த கட்டளையை விளக்கி சிறப்புரையாற்றினார். .
நிகழ்வில் திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா. செந்தூரப்பாண்டியன், மாவட்ட ப.க. தலைவர் செ.சந்திரசேகரன்,மாவட்டப்.க.செயலாளர் சு.திருமாவளவன், அயன் சிங்கம்பட்டி ப.க. தலைவர் தெட்சணாபூப்பாண்டி, வீரவநல்லூர் திமுக அவைத் தலைவர் பழனி,நகரதிமுக துணைச்செயலாளர் முத்துராம லிங்கம், அயன் சிங்கப்பட்டி மகளிர் பாசறை தலைவர் பி.சத்தியருக்மணி, சாந்தி, வீரவநல்லூர் மகளிர் அணி செயலாளர் க.ஆனந்த செல்வி, மும்பை கா.வாசுகி, மாவட்ட மாணவர் கழக துணைத் தலைவர் சண்முகசுந்தரம், மகாராசா,சுனில், நெல்லை மாநகர செயலாளர் ம.வெயிலு முத்து, வள்ளியூர் நகர கழகச் செயலாளர்பெ.நம்பிராசன், வள்ளியூர் நகர ப.க. தலைவர் ந. குணசீலன், வள்ளியூர் நகர ப.க.துணைத் தலைவர் சு.வெள்ளைப்பாண்டி வள்ளியூர் நகர ப.க.துணைச்செயலாளர் இ.மோகனசுந்தரம், தென்கலம் நகர கழக செயலாளர் கு.வெள் ளத்துரை தச்சை பகுதி கழக செயலாளர் மாரி. கணேசு, நெல்லை நகரப.க. தலைவர் முரசொலி முருகன் நெல்லை நகர் ப.க.துணைத்தலைவர் சந்திப்பு நடராசன், மாவட்ட இளைஞரணி தலைவர் ஆ. வீரபாண்டிய கட்டபொம்மன், மாவட்ட மாணவர் கழக தலைவர் செ.சூர்யா, பாரத், சிறீநாத், உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்பித்தார்கள்.
நிகழ்வின் சிறப்பாக 88 -அகவை நிரம்பிய கழக காப்பாளர் நெல்லை இரா.காசிக்கு மேனாள் சட்டமன்ற தலைவர் இரா.ஆவுடையப்பன் சால்வை போர்த்தி வாழ்த்தினார்.
மாவட்ட திமுக செயலாளர் இரா.ஆவுடையப்பன் வழிகாட்டு தலின்படி பிறந்தநாள் விழா விற்கு வருகைதந்த அய்நூறு தோழர்களுக்கும், பிரியாணி விருந்தளித்து மகிழ்ந்த வீரவ நல்லூர் நகர திமுக செயலாளர் வீ.சுப்பையாவுக்கும், தமிழர் தலைவர் பிறந்தநாள் விழாவை வீரவநல்லூரில் நடத்துவது எங் களுக்கு கிடைத்த பெருமையாகும் என உற்சாகம் பொங்க விழாவை நடத்திக் காட்டிய ஒன்றிய கழகத் தலைவர் கோ.செல்வசுந்தரசேகர், மாவட்ட இளைஞரணி செயலாளர் மு.தமிழ்ச்செல்வன், பெரியார்பெருந்தொண்டர் பெரியார்பித்தன் நகர கழக செயலாளர் மா.கருணாநிதி ஆகியோருக்கும் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு.இரா.குணசேகரன் பாராட்டையும், நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.