மூளையில் சிலருக்கு கட்டி வளரும். இதை ஆரம்பத்திலேயே கவனித்துவிட்டால் சரிசெய்துவிடலாம். இல்லையென்றால், உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும். மூளையில் கட்டி உள்ளவர்களுக்கு கீழ்கண்ட அறிகுறிகள் இருக்கும். 1) அடிக்கடி தலைவலி வருதல் 2) வலிப்பு 3) மங்கலான பார்வை 4) தலைசுற்றல் – வாந்தி 5) ஞாபக மறதி 6) அடிக்கடி கோபம் 7) பேச்சு இடர்பாடு 8) காது கேட்காமல் போவது ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகள் ஆகும்.
கண்ணீரில் இருந்து கரண்ட் தயாரிப்பு..!
கண்ணீர் துளிகளில் இருந்து மின்சாரம் தயாரிக்க ஆராய்ச்சியாளர்கள் முயற்சித்து வருகின்றனர். கண்ணீரில் ‘Nacre’ என்ற நுண் படிகம் இருப்பதை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த படிகத்தை அழுத்தத்திற்கு உட்படுத்தும் போது மின்சாரம் தயாரிக்கலாம் என ஆய்வில் தெரியவந்துள்ளது. வருங்காலத்தில் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் மின்சாரம் தயாரிக்க இது பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நம்பிக்கையில்லா தீர்மானம் ஏன்? கார்கே விளக்கம்
மாநிலங்களவையில் குடியரசு துணைத் தலைவர் ஜெக்தீப் தன்கர் பாரபட்சமாக செயல்படுவதால்தான் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படுவதாக காங்கிரஸ் தலைவர் கார்கே கூறியுள்ளார். அனுபவம் வாய்ந்த தலைவர்களை பேச அனுமதிக்காததோடு, அவையில் கூச்சல், குழப்பம் ஏற்பட ஜெக்தீப் தன்கரே காரணமாக இருப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். முன்னதாக, ஜெக்தீப் தன்கரை பதவி நீக்க, மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 60 பேர் நம்பிக்கையில்லா நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.