பெரியகுளம், கைலாசபட்டியில் இயங்கி வரும் ராம்ஜி அறக்கட்டளையின் மாற்றுதிறனாளர்கள் மறுவாழ்வு இல்லத்தில் பக்கவாதம், முதுகு தண்டுவட பாதிப்பு, தசை தளர்வு நோய் உள்ள நோயாளிகளுக்கு சிறப்பு பயிற்சி மய்யம் அமைந்துள்ளது தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் 92 ஆம் ஆண்டு பிறந்தநாள் நிகழ்வாக அங்கே சிகிச்சை பெற்று வரும் அனைவருக்கும் ஆசிரியர் பிறந்த நாளை மகிழ்வுடன் பகிர்ந்து கொள்ள 8.12.2024 அன்று கழகத் தோழர்கள் இனிப்பு காரம் பிஸ்கட்டுகள் வழங்கி மகிழ்தனர். நிகழ்வில் தேனி மாவட்ட கழகத் துணைத் தலைவர் ஸ்டார்.சா.நாகராசன், திராவிட மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் ஸ்டார்.நா.ஜீவா, சமூக சேவகர் கோடீஸ்வரன் ராம்ஜி அறக்கட்டளை நிறுவனர் வெங்கட் பூபதி மற்றும் பாத அழுத்த சிகிச்சை மரு. திருமலைச்சாமி உடன் இருந்தனர்.