மதுரை புறநகர் மாவட்ட கழகத்தின் சார்பாக, எழுமலை டி.கிருஷ்ணாபுரத்தில்,தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 92ஆவது பிறந்த நாள் விழாவையொட்டி கொடி ஏற்றியும், இனிப்புகள் வழங்கியும், ஒரு பரப்புரை கூட்டமாக நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கிருஷ்ணாபுரம் கிளை மேலாளர் க.பாலையா தலைமை வகித்தார். த.ம.எரிமலை மதுரை புறநகர் மாவட்ட தலைவர், பா. முத்துக்கருப்பன் மதுரை புறநகர் மாவட்ட செயலாளர், அழ. சிங்கராசன் மாவட்ட துணை தலைவர், து. சந்திரன் மாவட்ட துணை செயலாளர், ரோ. கணேசன் மாவட்ட அமைப்பாளர், அ. மன்னர்மன்னன் பொதுக்குழு உறுப்பினர், இரா.கலைச்செல்வி மாவட்ட மகளிரணி செயலாளர் ஆகியோர் முன்னிலை ஏற்றனர். முனைவர், வா. நேரு மாநில பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற தலைவர் சிறப்புரையாற்றினார். திண்டுக்கல் ஈட்டி கணேசன் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி நடத்தினார். நே.அன்புமணி, மணிராசா, மற்றும் தோழமை கட்சி பொருப்பாளர்கள், கிராம பொதுமக்கள் பங்கேற்றனர். எழுமலை நகர செயலாளர் அய்யாத்துரை நன்றி கூறினார்.