திருச்சி, ஜூலை 23 – திருச்சி மாநகர திராவிடர் கழக கலந்துரையா டல் கூட்டம் 20-.07.2023 அன்று மாளை 6 மணியளவில் திருச்சி பெரியார் மாளிகை அன்னை மணியம்மையார் அரங்கத்தில் நடைபெற்றது
தகவல் தொழில்நுட்ப அணி மாநில ஒருங்கிணைப்பாளர் வி.சி.வில்வம் கழக செயல்பாடு கள் மற்றும் கழகப் பொறுப்பா ளர்கள் தோழர்கள் செய்ய வேண்டிய களப்பணிகள் குறித்து உரையாற்றினார்.
மாவட்டத் தலைவர் ஆரோக் கியராஜ் மாவட்ட செயலாளர் மோகன்தாஸ் ஆகியோர் முன் னிலை வகித்து உரை நிகழ்த் தினார்கள். ரெஜினாபால்ராஜ், சாந்தி, பெல் ஆண்டிராஜ், அசோக்குமார், குணசேகரன் ஜெயராஜ், காட்டூர் சங்கிலி முத்து, ராமதாஸ், சேவியர், சுல்தான் பாஷா, கருப்பு.கோகுல், திருவரம்பூர் இளங்கோவன், கலியபெருமாள், மகாமுனி உள் ளிட்டோர் உரையாற்றினர்.
திராவிடர் கழக மாநில ஒருங் கிணைப்பாளர் இரா.ஜெயக் குமார் கூட்டத்திற்கு தலைமை யேற்று கலந்துரையாடல் கூட் டத்தின் நோக்கங்களை விளக்கி யும் மாநகராட்சி பகுதி கழகங் களை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உருவாக்குவதின் நோக்கம் அதன் இறுதிஇலக்கு அதனால் ஏற்படும் பயன்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களின் அயராத உழைப்பு, குறித் தும் உரை நிகழ்த்தினார்.
திருச்சி மாநகராட்சி பகுதி கழக புதிய பொறுப்பாளர்களை கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் அறிவித் தார்.
கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
6.7.2023 அன்று சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற கழக தலைமை செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங் களை ஏற்று செயல்படுத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.
வைக்ககம் போராட்ட நூற் றாண்டு கலைஞர் நூற்றாண்டு விழா தெருமுனைக் கூட்டங் களை திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளி லும் நடத்துவது என முடிவு செய்யப்படுகிறது.
திருச்சி மாநகராட்சி பகுதிக ளில் முடிவடைந்த விடுதலை சந்தாவை புதுப்பித்து புதிய சந்தாக்களை சேர்த்து வழங்கு வது என முடிவு செய்யப்படுகிறது.
திருச்சி மாநகராட்சிகளின் வார்டுகளில் கீழ்க்கண்டவாறு பகுதி கழகங்களை பிரித்து புதிய அமைப்புகள் அமைக்கப்படுகி றது. கீழ்க்கண்டவர்கள் பகுதி கழகப் பொறுப்பாளர்களாக அறிவிக்கப்படுகிறார்கள்.
திருச்சி மாநகர திராவிடர்கழகம்
மாநகரத் தலைவர் : ச.துரைசாமி
மாநகர செயலாளர் :ஆ.சத்தியமூர்த்தி
திருச்சி மாநகராட்சி 7 பகுதிகளாக பிரிக்கப்பட்டு புதிய பொறுப்பாளர்கள் அறிவிக்கப்படுகிறார்கள்.
1, திருச்சி திருவரங்கம் பகுதி திராவிடர் கழகம் (10வார்டுகள்) – வார்டு 1 முதல் 10வரை.
பகுதி கழகத் தலைவர்: சா.கண்ணன்
பகுதி கழக செயலாளர்: இரா.முருகன்
பகுதி கழகத் துணைத் தலைவர்: த. அண்ணாத் துரை
2, திருச்சி மார்க்கெட் பகுதி திராவிடர் கழகம் (10வார்டுகள்) – வார்டு 11 முதல்20 வரை.
பகுதி கழக தலைவர்: மணிவேல்
பகுதி கழகச் செயலாளர்: அ.நேதாஜி
3, திருச்சி தில்லை நகர் பகுதி திராவிடர் கழகம் (10வார்டுகள்) – வார்டு 21 முதல் 30 வரை.
பகுதி கழகத் தலைவர்: மா.ராமதாஸ்
பகுதிகழக செயலாளர்: பா சுல்தான் பாஷா
பகுதி கழக துணை செயலாளர்:கணேசன்
4, திருச்சி பாலக்கரை பகுதி திராவிடர் கழகம் (10வார்டுகள்)-வார்டு31 முதல் 38 வரை. 51,52
பகுதி கழகத் தலைவர்: மா தமிழ்மணி
பகுதி கழக செயலாளர்: எம்.முபாரக்அலி
பகுதி கழகத் துணைத் தலைவர் ம.சேவியர்
பகுதி கழக துணைச்செயலாளர் மா. குணசேகர்
5, திருச்சி திருவெறும்பூர் பகுதி திராவிடர் கழகம் (7வார்டுகள்) – வார்டு 39 முதல் 45 வரை
பகுதி கழகத் தலைவர்: அ.காமராஜ்
பகுதி கழக செயலாளர்: ம.சங்கிலிமுத்து
பகுதி கழக துணைத் தலைவர் அ. சிவானந்தம்
பகுதி கழக துணைசெயலாளர்:
பெ.ராஜேந்திரன்
6, திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதி திராவிடர் கழகம் 9 வார்டுகள் – வார்டு 46 முதல் 50 வரை 57,58,59,60
பகுதி கழகத் தலைவர்:சி.மருதை
பகுதி கழக செயலாளர்:சா.கணேசன்
7, திருச்சி மிளகு பாறை பகுதி திராவிடர் கழகம் (9 வார்டுகள்) – 53,54,55,56,60,62,63, 64,65
பகுதி கழக செயலாளர்: ஆ. ஜெயராஜ்