பாபநாசம், ஜூலை 23 – வைக்கம் போராட்ட நூற்றாண்டு-, திராவிட மாடல் நூற்றாண்டு, முத்தமிழறிஞர் கலை ஞர் நூற்றாண்டு, சுயமரியாதை இயக்கம் நூற்றாண்டு, குருகுல போராட்டம் நூற்றாண்டு ஆகிய அய்ம்பெரும் விழாக்களின் நூற்றாண்டு தெரு முனைக் கூட்டம் புதிய பேருந்து நிலையம் பாப நாசத்தில் 21.07.2023 மாலை நடைபெற்றது.
அனைவரையும் வரவேற்று பாபநாசம் நகர கழக செயலாளர் மு. வீரமணி உரையாற்றினார். நகரக் கழக தலைவர் வெ. இளங்கோவன் தலைமை தாங்கினார். கோவி.ராஜீவ்காந்தி, சே.ஆனந்த குமார், குபசெ.சங்கர், வி.மதிவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
பகுத்தறிவாளர் கழக மாநில பொதுச் செயலா ளர் வி.மோகன், தலைமைக் கழக அமைப்பாளர் குடந்தை க. குருசாமி ஆகியோர் துவக்க உரை ஆற்றினார்கள்.
நிறைவாக திராவிடர் கழக பேச்சாளர் தஞ்சை இரா. பெரியார் செல்வன் சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் மாவட்ட தலைவர் வழக்குரைஞர் கு.நிம்மதி, மாவட்ட செயலாளர் சு.துரைராசு, ஒன்றிய தலைவர் தங்க.பூவானந்தம், ஒன்றிய செய லாளர் சு.கலியமூர்த்தி, மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் க.திருஞானசம்பந்தம், ஒன்றிய இளைஞரணி செயலாளர் லெனின் பாஸ்கர், ஒன்றிய துணை செயலாளர் க. ஜனார்த் தனன், அய்யம்பேட்டை நகர செயலாளர் வை.அறிவழகன், பகுத்தறிவா ளர் கழக பொறுப்பாளர் பெரியார் பெருந்தொண் டர் கு.ப. ஜெயராமன், மாவட்ட இளைஞரணி செயலாளர் தி.சரவணன், மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் கோவி.பெரியார் கண் ணன், மாவட்ட மகளிர் அணி தலைவர் எம்.திரி புரசுந்தரி மற்றும் ராணி குருசாமி உட்பட ஏராள மான கழக பொறுப்பா ளர்கள் கலந்து கொண் டார்கள். இந்திய தேசிய ஓபிசி காங்கிரசினுடைய பொதுச்செயலாளர் பூபதி ராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
திராவிடர் தொழிலாளர் அணியின் சார்பில் பேச்சாளர் தஞ்சை இரா. பெரியார் செல்வனுக்கு சிறப்பு செய்யப்பட்டது.