தூத்துக்குடி, ஜூலை 23 – தூத்துக்குடி மாநகர கலந்துரையாடல் கூட்டம் 14.7.2023 அன்று மாலை 6.30 மணிக்கு மாநகரத் தலைவர் பெரியார் தாசன் தலைமையில் நடைபெற்றது .
கூட்டத்தின் நோக்கத்தை விளக்கி மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்த நாடு.இரா.குணசேகரன் உரையாற்றி னார் காப்பாளர்கள் மா.பால்.இரா சேந்திரம், சு.காசி, மாவட்டத்தலைவர் மு.முனியசாமி, மாவட்டச் செயலாளர் கோ.முருகன், மாவட்டத்துணைத் தலைவர் இரா.ஆழ்வார், மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர் செ.நவீன்குமார் லெனின் ஆகியோர் கருத்துரையாற்றினார்கள்
நிறைவாக 60வார்டுகளை கொண்ட மாநகரத்தை நான்கு பகுதிகளாக பிரித்து அமைப்பு உருவாக்கப்பட்டது.
1)பூபாலராயபுரம் பகுதி கிளைக் கழகம் (வார்டு1-15)
தலைவர்-அ.சுந்தர் செயலாளர்-மு.சுந்தர்
2)அண்ணாநகர் பகுதி கிளைக் கழகம்(வார்டு16-30)
தலைவர்-பா.இராசேந்திரன்
செயலாளர் -கி.கலைச்செல்வன்
3)சுப்பையா புரம் பகுதி கிளைக் கழகம்(வார்டு 31-45)
தலைவர் -சக்திவேல்
செயலாளர்-கோ.சொர்னம்
4)முத்தையா புரம் பகுதி (வார்டு 46-60)
தலைவர்- செ.அழகுமுனியம்மாள்
செயலாளர்- ஆ.அன்னமுத்து
28.7.2023 அன்று நான்கு கிளைக் கழகங்களிலும் கழக் கொடியேற்றுவது என தீர்மானிக்கப்பட்டது.