கோபி மாவட்ட பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்!
கோபி, டிச.10- டிசம்பர் 8 ஆம் தேதி யன்று கோபிசெட்டிபாளையம் பெரியார் இல்லத்தில் பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் சீனு.தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார்.
பகுத்தறிவாளர் கழக மாவட்ட செய லாளர் த.விஜய சங்கர் வரவேற்புரை ஆற்றினார்.
பகுத்தறிவாளர் கழக மேனாள் தலைவர் கருப்பண்ணசாமி, கழக காப்பாளர் இரா.சீனிவாசன், ந.சிவ லிங்கம், ஈரோடு புத்தக நிலைய பொறுப்பாளர் மதிவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கருத்தரங்குகள் நடத்த ஏற்பாடு
மாநில அமைப்பாளர் அ.குப்புசாமி, பகுத்தறிவாளர் கழக கட்டமைப்பு, கோபி மாவட்ட பகுதிகளில் அரசு அலுவலர்கள், ஆசிரியர்களை பகுத்தறி வாளர் கழகத்தில் இணைத்தல், பெரியார் பேசுகிறார், விடுதலை வாசகர் வட்டம் போன்ற கருத்தரங்குகள் நடத்த ஏற்பாடு செய்தல் போன்ற இயக்கப் பணிகள் பற்றி எடுத்துக் கூறினார்.
பகுத்தறிவாளர் கழக மாநில பொதுச்செயலாளர் வா.தமிழ் பிரபாக ரன், எவ்வாறு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை அணுகி உறுப்பினர் சேர்த்தல், ஆசிரியர்களுக்கான அறிவியல் மனப்பான்மை பயிற்சி எவ்வாறு வெற்றிகரமாக நடத்துதல், கோபி பகுதிகளில் பகுத்தறிவாளர்கள் கழகத்தை எவ்வாறு கட்டமைத்தல் போன்ற இயக்க செயல்பாடுகளை எவ்வாறு வெற்றிகரமாக நடத்துதல் என்றும் டிசம்பர் 28,29 திருச்சியில் நடைபெறும் அகில இந்திய பகுத்தறி வாளர்கள் கூட்டமைப்பு நடத்தும் நாத்திகர் மாநாடு இம்முறை தமிழ்நாட்டில் நடைபெறுவது பற்றியும் அதனை வெற்றிகரமாக நடத்துவதற்கு பகுத்தறிவாளர் கழகம் என்னென்ன ஏற்பாடுகள் செய்துள்ளன என்பது பற்றியும் இன்றைய இந்துத்துவா, ஆர்எஸ்எஸ் சனாதனவாதிகளை எதிர்ப்பதற்கு இந்த மாநாடு எவ்வாறு அமையப் போகிறது என்றும் அதில் கலந்து கொள்வது ஒவ்வொரு பகுத்தறி வாளர்களின் கடமை என்பதையும் தெளிவாக விளக்கி கூறினார்.
மாநாட்டில் குடும்பம் குடும்பமாக…
அதனைத் தொடர்ந்து பேசிய பகுத்தறிவாளர் கழக தோழர்கள் அனைவரும் பெருந்திரளாக திருச்சி யில் நடைபெறும் அகில இந்திய பகுத்தறிவாளர்கள் கூட்டமைப்பு நாத்திகர் மாநாட்டில் குடும்பம் குடும்பமாக கலந்து கொள்வோம் என்று உறுதியளித்தனர்.
நிறைவாக பகுத்தறிவாளர் கழகப் பிரச்சார செய லாளர் கி.வெள்ளதுரை நன்றியுரை ஆற்றினார்.