டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* தற்போது நடைபெற்று வரும் குளிர்காலக் கூட்டத் தொடரில் மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தன்கருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர உள்ளதாக தகவல்.
*டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை ஒன்றிய அரசு ரத்து செய்ய வேண்டும்: அரசின் தனித் தீர்மானம் பேரவை யில் ஒருமனதாக நிறைவேற்றம்; தனித் தீர்மானத்தை ஒன்றிய அரசுக்கு அனுப்பியது தமிழ்நாடு அரசு!
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
*விவசாயிகளுக்கு மோடி அரசு துரோகம் இழைத்துள் ளது, காங்கிரஸ் தலைவர் கார்கே கண்டனம்.
* சக்தி காந்ததாஸ் இன்று ஓய்வு; ஒன்றிய வரு வாய்த் துறை செயலாளர் சஞ்சய் மல்கோத்ரா ரிசர்வ் வங்கி யின் புதிய ஆளுநராக அடுத்த 3 ஆண்டுகளுக்கு நியமனம்.
தி இந்து:
* விஎச்பி நிகழ்ச்சியில் பேசிய அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி மீது நடவடிக்கை எடுக்க அகில இந்திய வழக்குரைஞர்கள் சங்கம் குடியரசுத் தலைவர் மற்றும் தலைமை நீதிபதிக்கு கோரிக்கை
– குடந்தை கருணா