மக்கள் பிறப்புக்கூட இனி அருமையாகத்தான் போய்விடும். அதுபோலவே சாவும் இனிக் குறைந்துவிடும். மனிதன் வெகு சுலபமாக நூறு ஆண்டு வாழ முடியும்; யாரும் சராசரி ஒன்று இரண்டுபிள்ளைகளுக்கு மேல் பெறமாட்டார்கள். ஆண், பெண் புணர்ச்சிக்கும் பிள்ளைப் பிறப்புக்கும் சம்பந்தமில்லாமலே போய்விடும். வேலை செய்கிற குதிரை வேறு, குட்டிப் போடுகிற, போடச் செய்கிற குதிரை வேறு என்கிற மாதிரி மனிதச் சமூகத்தில் இருக்கும். இதன்படி பிள்ளை பெறும் தொல்லை, வளர்க்கும் தொல்லை, அதற்குச் சொத்து சுகம் தேடும் தொல்லை இருக்குமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’