தூத்துக்குடி, டிச.10- 10.11.2024 அன்று காலை 10 மணிக்கு மறைந்த கருஞ் சட்டைப் படை வீரர்கள் பெ.காலாடி மற்றும் இரா.அய்யம்பெருமாள் ஆகியோரின் படத்திறப்பு தூத்துக்குடி பெரியார் மய்யத்தில் எழுச்சியுடன் நடைபெற்றது.
இந்த நிகழ்வுக்கு தூத்துக்குடி மாவட்ட கழக காப்பாளர் சு.காசி தலைமை ஏற்று நடத்தினார். மாவட்ட செயலாளர் கோ.முருகன் முன்னிலை வகித்தார்.
பெ.காலாடி அவர் களின் படத்தை தென் காசி மாவட்ட கழக காப்பாளர் சீ.டேவிட் செல்லத்துரை அவர்களும், இரா.அய்யம்பெருமாள் அவர்களின் படத்தை நெல்லை மாவட் டத் தலைவர் ச.இராசேந் திரனும் திறந்து வைத்தனர்.
இந்நிகழ்வில் பொதுக் குழு உறுப்பினர் அய்.இராமச்சந்திரன் மற்றும் தென்காசி மாவட்ட செயலாளர் கை.சண்முகம், குமரி மாவட்ட தலைவர் மா.மு.சுப்பிரமணியன், மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன், நெல்லை மாவட்ட செயலாளர் இரா.வேல் முருகன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புச் செய்தனர்.
இந்நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு ரைஞர் சார்லஸ், மக்கள் அதிகாரம் செல்வம், புரட்சிகர இளைஞர் முன்னணி சுஜித், தமிழர் விடியல் கட்சி சந்தனராஜ், தமிழ்ப்புலிகள் கட்சி கத்தார் பாலு, ஆதிதமிழர் கட்சி ஊர்காவலன், திராவிட முன்னேற்றக் கழகம் மோ.அன்பழகன் ஆகியோர் கலந்து கெண்டு சிறப்பு செய்தனர்.
இறுதியில் தூத்துக்குடி மாவட்ட கழகக் காப்பாளர் மா.பால் இராசேந்திரம், பெ.காலாடி, அய்யம்பெருமாள் ஆகியோரின் தியாகத்தை யும், கழகத்தின் கொள் கைகளையும் விளக்கி சிறப்புரை ஆற்றினார்.
முடிவில் பெ.காலா டியின் மகன் கா.பழனிச் சாமியும், இரா.அய்யம் பெருமாள் அவர்களின் மகன் அரசு வழக்குரைஞர் அ.பூங்குமார் ஆகியோர் நன்றியுரையாற்றினர். நிகழ்வில் இரு குடும்பங் களைச் சேர்ந்த உற்றார் உறவினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அனைவரும் பயனாடை கள், புத்தகங்கள் வழங் கப்பட்டன. கழகத் தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர். அனைவருக்கும் சிறப்பான உணவு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வு சிறப் பாக நடைபெற கழகத் தோழர்கள் வழக் குரைஞர் திரவியம் மற்றும் இளைஞரணி கார்த்திகேயன், த.செல்வ ராசு, க.பாலமுருகன், நாகராசன், செல்லத்துரை, கந்தசாமி ஆகியோர் மிகுந்த ஒத்துழைப்பும், கடின உழைப்பையும் தந்து உதவினர். பெரியார் மய்யக் காப்பாளர் பொ.போசு அவர்களின் சீரிய பணியும் உழைப்பும் மிகவும் பாராட்டுதலுக்குரியது.