சிறப்பு குருதிக் கொடை மற்றும் இலவச பொது மருத்துவ முகாம் விழா மாட்சிகள்
சென்னை, டிச. 10- தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 92ஆவது பிறந்த நாளையொட்டி குருதிக் கொடை முகாம் மற்றும் இலவச பொது மருத்துவ முகாம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இம்முகாம் சென்னை பெரியார் திடலில் உள்ள பெரியார் மணியம்மை மருத்துவமனையில் 7.12.2024 அன்று காலை 9 மணியளவில் தொடங்கி மதியம் 1.30 மணி அளவில் முடிவுற்றது.
இம்முகாமில் 50க்கும் மேற்பட்ட கழகத் தோழர்கள் குருதிக் கொடை வழங்கி மகிழ்ந்தனர். 300க்கும் மேற்பட்ட கழக குடும்பத்தினர் மற்றும் பொது மக்கள் இலவச பொது மருத்துவ முகாமில் கலந்து கொண்டனர். பொது மருத்துவம் மற்றும் நீரிழிவு நோய்களுக்கு மருத்துவம் மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
முன்னதாக காலை 9.30 மணி அளவில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் இம்முகாமினைத் தொடங்கி வைத்தார்.
பெரியார் மணியம்மை மருத்துவ மனை இயக்குநர் டாக்டர் இரா.கவுத மன் மற்றும் பெரியார் மணியம்மை மருத்துவமனையின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ச.மீனாம்பாள், நிலைய மருத் துவர் பி.இராஜேஸ்வரி, தேனி மாவட்ட அரசு செவிலியர் கல்லூரி மேனாள் முதல்வர் வி.கே.ஆர்.பெரியார்செல்வி ஆகியோர் கலந்து கொண்டனர்.
வந்திருந்த கழகத் தோழர்கள், பொது மக்கள் அனைவருக்கும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கி உதவினர்.
இக்குருதிக் கொடை முகாம் சிறப்புடன் செயல்பட சென்னை இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவ மனை இரத்த வங்கியில் இருந்து மருத்துவர் அருண், முதன்மை செவிலியர் கே.ஏ.குமாரி, சம்யுக்தா, இரத்தப் பரிசோதகர் கே.ராதா, செவிலியர் மாணவிகள் அன்பரசி, அனிதா, மருத்துவ உதவியாளர்கள் சிவனேசன், காவ்யா சாத்தப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் குருதிக் கொடையை ஊக்கப்படுத்தும் விதமாக முகப்பேர் HDFC வங்கிக் கிளையிலிருந்து தேவபிச்சை என்பவர் இம்முகாமில் கலந்து கொண்ட பணியாளர்களுக்கு தேநீர் காலை, உணவு, மதிய உணவு அளித்து சிறப்பு செய்தார்.
முன்னதாக சிறப்பு விருந்தினர்களுக்கு மற்றும் மருத்துவர்களுக்கு சால்வை அணிவித்தார். குருதிக் கொடை வழங்கியவர்களுக்கு சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசினை HDFC வங்கி சார்பில் வழங்கி உதவினார்.
பெரியார் மருத்துவமனை சார்பில் ஜி.தயாளன், செவிலியர்கள் சி.ஆக்னஸ், என்.டி.உமாலூசி மற்றும் சந்தியா ஆகியோர் கலந்து கொண்டனர். வந் திருந்த அனைவருக்கும் தேவை யான மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. முகாம் மதியம் 2 மணிக்கு முடிவுற்றது.