செங்கல்பட்டு, டிச. 10- 1.12.2024 அன்று மாலை 6 மணிக்கு செங்கற்பட்டு மாவட்ட கழக கலந்துறவாடல் கூட்டம் கேவிஎம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
மாவட்ட கழகத் தலைவர் அ.செம்பி யன் தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணி செயலாளர் வினோத்குமார் அனைவரையும் வரவேற்றார்.
மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்த நாடு இரா.குணசேகரன் பங்கேற்று அறி வுலகப்பேராசான் தந்தை பெரியாரின் கொள்கைப் பிரகடனங்களாக செங்கற்பட்டு சுயமரியாதை இயக்க மாநாட்டில் அறிவிக்கப்பட்ட தீர் மானங்கள் சட்டதிட்டங்களாக ஆகிக்கொண்டிருக்கும் இந்நாளில் செங்கற்பட்டில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மாநாடு நடத்த வேண்டிய அவசியத்தையும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பேருழைப்பால் தமிழ்ச் சமூகம் பெற்றிருக்கும் உயர்வினையும் எடுத்துக்காட்டி தொடக்கவுரையாற்றினார்.
மாவட்டச்செயலாளர் ம.நரசிம்மன், மாநில பகுத்தறிவு கலைத் துறைத் தலைவர் மு.கலைவாணன், மாநில இளைஞரணி துணைச்செயலாளர் மு.அருண்,பொதுக்குழு உறுப்பினர்கள் செங்கைபூ.சுந்தரம், அ.பா.கருணாகரன், மாவட்ட அமைப்பாளர் பொன்.இராசேந்திரன், மாவட்ட ப.க.தலைவர் அ.சிவக்குமார் செயலாளர் சி.தீனதயாளன், அமைப்பாளர் பிச்சை, மறைமலைநகர் நகரசெயலாளர் ம.வெங்கடேசன்,திருவள்ளுவர் மன்ற தலைவர் மா.சமத்துவமணி, சே.சகாயராஜ், பக.தலைவர் ப.முருகன், வி.வசந்தன், தொழிலாளரணி தலைவர் மா.இராசு, வி.வசந்தன் களியப்பேட்டை தமிழ்மணி, ம.ஏழுமலை தஞ்சை ஏவிஎம்குணசேகரன், தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுப்பட்டு அ.இராமலிங்கம் ஆகியோர் கருத்துரை யாற்றினார்கள்.
இறுதியில் கூட்டத்தலைவர் அ.செம்பியன் தமது உரையில் புதிய பொறுப்பாளர்களாக எங்களை நியமித் துள்ளமைக்கு ஆசிரியர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதுடன் அனைவரின் ஒத்துழைப்போடு செயலாற்றுவோம் என உறுதிமொழிந்தார்.
மாவட்டக் கழக புதிய பொறுப் பாளர்களுக்கு தோழர்கள் பயனாடை போர்த்தி பாராட்டி மகிழ்ந்தார்கள்.
பகுத்தறிவாளர் கழக செயற்பாட்டிற்கு உற்றதுணையாக விளங்கும் சுசிலா முருகனுக்கு அவர்களுக்கு மாவட்டக் கழகம் சார்பில் சிறப்பு செய்யப்பட்டது.
இறுதியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
செங்கல்பட்டு மாவட்டத்தலைவர் ஆக அ.செம்பியன்,மாவட்டச் செயலாளராக ம.நரசிம்மன்,பொதுக்குழு உறுப்பினராக செங்கை.பூ.சுந்தரம் ஆகியோரை நியமித்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு இக்கூட்டம் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
தமிழர் தலைவர் அவர்களது வழிகாட்டுதலை ஏற்று மாவட்டக் கழக தலைவராக செயலாற்றிய செங்கை.பூ.சுந்தரத்துக்கு இக்கூட்டம் பாராட்டை தெரிவித்துக்கொள்கிறது.
1929 ஆம் ஆண்டே சுயமரியாதை இயக்க மாநாட்டை நடத்தச்செய்து புரட்சிகரமான கொள்கைகளை தந்தைபெரியார் அறிவித்த செங்கற்பட்டில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மாநாட்டை 2026 பிப்ரவரி திங்களில் நடத்துவதற்கு ஒப்புதல் தருமாறு தமிழர்தலைவர்அவர்களை கேட்டுக்கொள்கிறது.
செங்கற்பட்டில் தமிழர் தலைவரின் 92 ஆம் பிறந்தநாள் மகிழ்வாக செங்கற்பட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி நூலகம்,பெரியார் புத்தக விற்பனை நிலையம் அமைப்பது என தீர்மானிக்கப்பட்டது.
கழகத் தலைவரின் 92 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கொள்கை குடும்ப விழா!
தந்தை பெரியார் நூல் அறிமுக விழா நடத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.
பொறுப்பாளர்கள்
மாவட்டத் துணைத் தலைவர் கல்பாக்கம் சாலமன்
மாவட்ட துணைச் செயலாளர் பொன்.இராசேந்திரன்
செங்கற்பட்டு நகரத்தலைவர் கெ.தமிழ்மணி
காட்டங்குளத்தூர் ஒன்றிய தலைவர் செந்தில்குமார்
மதுராந்தகம் ஒன்றியத்தலைவர் ஆ.யாக்கோபு