ஒன்றிய அரசின் புதிய பான் கார்டு பதிப்பு, PAN 2.0 அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்காக நீங்கள் எதுவும் செய்ய வேண்டியதில்லை. புதுப்பிக்கப்பட்ட புதிய பான் (PAN) அட்டையை உங்கள் முகவரிக்கு அரசு நேரடியாக அனுப்பும். கவனமாக இருங்கள். பான் கார்டு புதுப்பிப்புக்கான குறுஞ்செய்தி, மின்னஞ்சல் எதற்கும் பதிலளிக்க வேண்டாம். எந்த தகவலும் அல்லது OTP யையும் கொடுக்க வேண்டாம். எச்சரிக்கையாக இருந்து இணைய மோசடிகளைத் தவிர்க்கவும்.