உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதி ரோகிந்தன் நாரிமன்
திருவனந்தபுரம், டிச.10 உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதி ரோகிந்தன் நாரிமன் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவு உயர்ஜாதியினருக்கான (EWS) 10 சதவிகித இடஒதுக்கீட்டைப் பற்றி கேரள உயர்நீதி மன்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது இந்த இட ஒதுக்கீடு இந்திய அரசமைப்புச் சட்டத்தைத் தலைகீழாக புரட்டிப் போட்டுள்ளது. இது ஒரு வரலாற்றுப்பிழை என்று கூறினார்.
அவர் கேரள உயர்நீதிமன்ற பார்க வுன்சில் கூட்டத்தில் பேசியதன் தமிழாக்கம் வருமாறு:
103 ஆவது அரசமைப்புச் சட்டத் சீர்திருத்தம் வாயிலாக பொருளாதார ரீதியாக நலிந்தபிரிவினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டமை அரசமைப்புச் சட்டத்தை தலைகீழாக மாற்றுவது போன்றது. மேலும், 2022 ஆம் ஆண்டு 3:2 அரசமைப்புச் சட்ட அமர்வில் EWS இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்திய உச்சநீதிமன்றத்தின் அணுகுமுறையை ஏற்க முடியாது.
அரசமைப்புச் சட்டத்தைத் திருத்தி 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டை கொண்டுவந்ததன் மூலம் அரசமைப்புச் சட்டத்தையே தலைகீழாக மாற்றி அதன் முக்கியத்துவத்தைச் சிதைத்துவிட்டார்கள்
அரசமைப்புச் சட்டத்தை வகுத்த வர்கள் சில சமுதாயங்களின் வர லாற்றுத் தவறுகளால் ஏற்பட்ட சமூகப் பின்தங்கிய நிலைமைகளைக் குறைக்க இடஒதுக்கீட்டைக் கொண்டு வந்தனர். அவர்கள் பொருளாதார அளவு கோல்களைக் கருத்தில் கொள்ளவில்லை.
அரசமைப்புச் சட்டத்தின் 46 ஆவது பிரிவு அரசுக்கு தாழ்த்தப்பட்ட (SC), பழங்குடி (ST) மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் கல்வி மற்றும் பொருளாதார நலன்களைப் பாதுகாக்கும் அதிகாரம் அளிக்கிறது. 46ஆவது பிரிவு பொருளாதார அளவுகோல்களின் அடிப்படையிலான வகைப்பாட்டை ஏற்றுக்கொள்ளாது. இதைச் சாதாரண வாசிப்பிலேயே தெளி வாகக் காணலாம். இந்தப் பிரிவின் இறுதிப் பகுதியை அய்ந்து நீதிபதிகளும் முற்றிலும் புறக்கணித்துள்ளனர்.
வரலாற்று ரீதியாக எந்த பாதிப்பை எதிர்கொண்டார்கள்?
EWS இடஒதுக்கீடு அரசமைப்புச் சட்டத்தின் 46ஆவது பிரிவுக்கு நேரெதிரானது, ஏனெனில் இதில் மேல்ஜாதி ஹிந்துக்களுக்கு இடஒதுக்கீடு அனுமதிக்கப்பட்டுள்ளது, மேலும் அவர்கள் வரலாற்று ரீதியாக எந்தவித பாதிப்பையும் அனுபவிக்கவில்லை.
நீங்கள் அத்தகைய மக்களை ஏன் வெளியேற்றுகிறீர்கள்? யாரை உள்ளடக்க வேண்டுமென்பதே தேவைப்படுகிறது, அதாவது தாழ்த்தப்பட்ட, பழங்குடி, பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை வெளியேற்றிய பிறகு நீங்கள் யாரை கொண்டுவருவீர்கள்?. நீங்கள் இந்த மக்கள் அனைவரையும் வெளியேற்றினால் யாரை அங்கு யாரைக் கொண்டுவருவீர்கள்? நீங்கள் பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்களை மட்டுமே உள்ளடக்கு கிறீர்கள்.
இந்த மக்கள் (EWS) வரலாற்று ரீதியாக எந்தவித அநீதிகளையும் அனுபவிக்க வில்லை, ஆனால் பின்னரும் நீங்கள் அவர்களுக்காக சில அம்சங்களை பாதுகாத்து வைக்கிறீர்கள். மேலும் வரலாற்று ரீதியாக அநீதிகளை அனுபவித்தவர்களுக்கு எந்தவிதமான பாதுகாப்பும் வழங்கப்படவில்லை. அதனால் உண்மையில் அரசமைப்புச்சட்டமே தலைகீழாக மாற்றப்பட்டுள்ளது.
முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களைப் பொறுத்தவரை, அவர்களை இடஒதுக்கீட்டின் வரம்பில் சேர்க்க முடியாது, ஏனெனில் அவர்கள் ஏற்கெனவே அரசமைப்புச் சட்டத்தின் 30 ஆவது பிரிவின் கீழ் பாதுகாக்கப்பட்டுள்ளனர். முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் வரலாற்றில் 341 ஆவது பிரிவின் கீழ் அந்தப் பட்டியலில் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளனர். மற்றும் அது ஹிந்துக்களுக்கு மட்டும் பொருந்தும்.
EWS இவற்றை முற்றிலும் புறக்கணித்துள்ளது. அரசமைப்புச் சட்டத்தின் 30-ஆவது பிரிவு சிறுபான்மையினருக்கு சிறுபான்மை அமைப்புகளை நிறுவவும், நடத்தவும் அதிகாரம் வழங்குகிறது. இவை அனைத்துமே முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளது மற்றும் இப்பொழுது ஒரு அரசமைப்புச் சட்ட சீர்திருத்தம் இருக்கிறது, இது அரசமைப்புச் சட்டத்தை முற்றிலுமாக மாற்றியுள்ளது. அதற்கு மூன்று நீதிபதிகளால் முழு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
EWS தீர்ப்பு அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையிலும் அல்லது எந்தவொரு தத்துவத்தின் அடிப்படையிலும் சரியாக இல்லை.
பொருளாதார அளவுகோல் தீர்ப்பு அரசமைப்புச் சட்டத்திலோ அல்லது எந்தவொரு தத்துவத்திலோ சரியாக முழுமையாக இல்லை. இது அரசமைப்புச் சட்டத்தின் 46, 16(1) மற்றும் 15(1) பிரிவுகளுக்கு எதிரானது, என்று மேனாள் நீதிபதி நாரிமன் கேரளா உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசினார்.
நீதிபதி நரிமன் அரசமைப்புச் சட்டத்தின் அமர்வின் பெரும்பான்மை கருத்திலிருந்து வேறுபட்ட கருத்தைக் கொண்ட இரண்டு நீதிபதிகளின் கருத்துகளுக்கும் கேள்வி எழுப்பினார்.