சென்னை,ஜூலை 23 – உலக முதலீட்டாளர் மாநாட்டின் சிறப்பு அதிகாரியாக வி.அருண்ராய் நியமிக் கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தலைமைச் செயலர் சிவ் தாஸ் மீனா பிறப்பித்துள்ளார்.
இது குறித்து அவர் பிறப்பித்த உத்தரவு: (அதிகாரிகள் முன்பு வகித்த பதவி அடைப்புக் குறிக்குள்)
1. தேவ் ராஜ் தேவ் – அறிவியல் நகரத்தின் துணைத் தலைவர் (ஒழுங்கு நடவடிக்கைகள் ஆணை யர், கோவை)
2. பி.ஆகாஷ் – தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் (தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை இணைச் செயலர்)
3. நிஷாந்த் கிருஷ்ணா – தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் (தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநர்)
4. வி.அருண் ராய் – குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் துறை செயலர், உலக முதலீட்டாளர் மாநாட்டின் சிறப்பு அதிகாரி பொறுப்பை கூடுதலாகக் கவனிப் பார் என்று தனது உத்தரவில் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.
மீண்டும் அதே பதவி
கடந்த 2018ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் இரண்டாவது முறையாக உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தப்பட்டது. இந்த மாநாட்டின் சிறப்பு அதிகாரியாக வி.அருண் ராய் செயல்பட்டார். மாநாட்டில் பங் கேற்க பல்வேறு நாடுகளுக்கு அழைப்பு விடுப்பது, அழைப்பிதழ் களைத் தயாரித்து அனுப்புவது உள்பட முதலீட்டாளர் மாநாட்டுக்குரிய அனைத்துப் பணிகளையும் சிறப்பு அதிகாரி ஒருங்கிணைப்பார்.