சென்னை, டி.ச.10- சென்னை மாநகராட்சி யில் ரூ.279% கோடியில் 493 புதிய திட்டப்பணிக ளுக்கு துணை முதல்- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
அடிக்கல் நாட்டினார்
சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்தில் நேற்று (9.12.2024), சென்னையில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் விழா நடைபெற் றது. விழாவுக்கு, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு தலைமை தாங்கினார். அமைச்சர்கள், தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் மற் றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ரூ.279% கோடி மதிப்பீட்டில் 493 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து, ரூ.29.88 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 17 புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர், மாநகராட்சியில் கருணை அடிப்படையில் 106பேர். ஒப்பந்த அடிப்படையில் மருத்துவ அலுவலர்கள், நர்சுகள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் என 453 பேர் என மொத்தம் 559 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் அவர் வழங்கினார்.
பின்னர் நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
சென்னையின் வளர்ச்சி
சென்னையில் சமீபத்தில் ஒரு புயலும், 2 முறை பெருமழையும் பெய்தது. இந்த இயற்கை சீற்றத்தில் மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்ப டாதவகையில் தி.மு.க. அரசு சிறப்பாக செயல்பட்டது. இதற்காக அமைச்சர் கே.என். நேரு, சென்னை மாநகராட்சி அதிகாரிகள், பணியாளர்கள் ஆகியோருக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அனைவரும் மிகச் சிறப்பாக பணியாற்றி பாதிப்புகளை தவிர்த்தார்கள்.
சிங்கார சென்னை 2.0 என்ற முதலமைச்சரின் மாபெரும் கனவு திட்டம் தற்போது சாத்தியம் அடைந்து வருகிறது. சென்னையின் சீரான வளர்ச்சிக்கு, வட சென்னை வளர்ச்சி திட்டத்தை முதலமைச்சர் ரூ.6 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தி வருகிறார்.
நீர்நிலைகள் சீரமைப்பில் கவனம்
இந்த திட்டத்தின் கீழ் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 1,012 பணிகள் ரூ.901கோடியில் முடிக்கப்பட்டு மக்கள் பயன் பாட்டுக்குகொண்டுவரப்பட்டுள்ளது. அந்த வகையில் தான் ரூ.30 கோடியில் 17 பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் ஏற்கெனவே 225 குளங்கள் இருக்கிறது. மேலும், 41 குளங்கள் புதிதாக உருவாக்கும் பணியில் மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது. நீர்நிலைகள் சீரமைப்பில் கவனம் செலுத்தியதால் தான் சமீபத்தில் 15 செ.மீ. மழை பெய்தும் பெரிய பாதிப்பு இல்லை
– இவ்வாறு அவர்பேசினார்.