விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதிக்க மாட்டார் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கல்வி ஒன்றுதான் நிலையானது என்பதை அறிந்தே, அனைவரும் கல்வி கற்பதற்காக பல திட்டங்களை ஸ்டாலின் செயல்படுத்துகிறார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் கல்வி கற்க செல்வோரை தடுத்து, குடும்பத் தொழிலில் ஈடுபட வைக்க விஸ்வகர்மா திட்டம் ஒன்றிய அரசால் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் சாடியுள்ளார்.