புதுக்கோட்டை, டிச. 9- புதுக் கோட்டை மாவட்டத் திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழகக் கலந்துறவாடல் கூட்டம் மாவட்ட திராவிடர் கழக அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மாவட்ட ப.க.தலைவர் செ.அ.தர்மசேகர் தலைமை வகித்தார். மாவட்டத் திராவிடர் கழகத் தலைவர் மு. அறிவொளி, மாவட்டச் செயலாளர் ப.வீரப்பன், மாவட்டத் துணைத் தலைவர் சு.கண்ணன், மாவட்ட ப.க.அமைப்பாளர் தி.குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ப.க.மாவட்டச் செயலாளர் இரா.மலர்மன்னன் அனைவரையும் வரவேற்றார்.
கலந்துறவாடல் கூட்டம் பற்றிய நோக்கவுரையாக மாநில ப.க.அமைப்பாளர் அ.சரவணன் உரையாற்றினார். பகுத்தறிவாளர் கழக பொதுச் செயலாளர் வி.மோகன் சிறப்புரையாற்றினார். அப்போது தமிழ்நாட்டில் பகுத்தறிவாளர் கழகம் செய்ய வேண்டிய பணிகள், இதற்கு முன் ஆற்றிய பணிகள் எந்தளவுக்கு சமூகத்தைச் சென்றடைந்து சீர் படுத்தி இருக்கிறது என்று தொடங்கி இப்போதிருக்கும் சூழ்நிலையில் பகுத்தறிவாளர்களின் பங்களிப்பு என்ன? எவ்வாறு செயலாற்ற வேண்டும் என்பது குறித்து விரிவாகப் பேசினார்.
நிகழ்வில் மேலும் சூரியமூர்த்தி, முத்துலெட்சுமி, கந்தர்வகோட்டை பேராசிரியர் முனைவர் ஆறுமுகம் ம.மு.கண்ணன் உள்ளிட்ட தோழர் கள் கலந்து கொண்டனர். நிகழ்வில் திருச்சியில் நடைபெற இருக்கும் பகுத்தறிவாளர் கழக மாநாட்டு நிதியாக முதல் தவணையாக ரூபாய் மூவாயிரம் ப.க. பொதுச்செயலாளர் மோகனிடம் மாவட்டப் பொறுப் பாளர்கள் வழங்கினார்கள். மாவட்ட அமைப்பாளர் தி.குணசேகன் நன்றி கூறினார்.