* தாம்பரம் கழக மாவட்டம் பெரியார் உணர்வாளர் கரசங்கால் ரெ.கதிர்வேல் அவர்களின் பெயர்த்தி செ.மகிழினியின் 6ஆவது ஆண்டு பிறந்தநாள் (9.12.2024) மகிழ்வாக நாகம்மையார் குழந்தை இல்லத்திற்கு ரூபாய் 600 நன்கொடை வழங்கியுள்ளார்.
* மதுரை வே.செல்வம்-சுமதி, இரா.சுந்தரமூத்தி – அரசுப் பள்ளி ஆசிரியர் பிரேமலதா ஆகியோரின் செல்வங்களும் எஸ்.பி.மகிழனின் தாய் தந்தையுமான வி.எஸ்.பிரதாப் சிங்-எஸ்.சூரியவந்தனா ஆகியோரின் மூன்றாம் ஆண்டு மணவிழா நினைவாக பெரியார் உலகத்திற்கு தமிழர் தலைவரின் பிறந்த நாள் விழாவில் ரூ.1000 வழங்கப்பட்டது.
* இராசாளிக்குடிக்காடு எங்களது தாயார் கோ.யமுனம்பாள் இரண்டாம் ஆண்டு (9.12.2024) நினைவு நாளை முன்னிட்டு பெரியார் உலகம் நிதியாக ரூ.500 வழங்கப்படுகிறது. மகன் கோ.காசிவேலு-இளஞ்சியம், கலைமகன் கோ.காமராஜ்-சித்ரா, கவிஞர் கோ.செல்வம்-கலையரசி, மன்னை ஒன்றிய கழக துணைச் செயலாளர் பெயரன் கா.இராஜகுமார்-தமிழரசி, கா.அருண்-ஹரிணி, செ.திராவிடமணி, செ.தமிழ்மணி.
* சேலம் – கெங்கவல்லி அய்.கலியபெருமாள் அவர்களின் இணையர் ப.அன்னக்கொடியின் 13 ஆம் ஆண்டு நினைவு நாளினையொட்டி (09.12.2024) நாகம்மையார் இல்லக்குழந்தைகளுக்கு மதிய சிறப்பு உணவிற்காக கணவர் கலியபெருமாள், மகள் – மருமகன், மகன் – மருமகள், பெயரன் – பெயர்த்திகள் சார்பாக நன்கொடை வழங்கினர்.