பெரியகுளம் கீழ வடகரையில் தேனி மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடம் கூட்டம் நடைபெற்றது. தேனி மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் அ.மோகன் தலைமையில் தேனி மாவட்ட கழக செயலாளர் பூ.மணிகண்டன் வரவேற்புரை ஆற்ற, கழக கம்பம் மாவட்ட செயலாளர் செந்தில்குமார் மாநில அமைப்பாளர் கா சிவா மாவட்ட அமைப்பாளர் சே கண்ணன் முன்னிலை வகிக்க பகுத்தறிவாளர் கழக மாநில பொதுச் செயலாளர் ஆ மோகன் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் மாவட்ட பொறுப்பாளர் பகுத்தறிவாளர் கழக பொருளாளர் கருப்பண்ணன், கம்பம் மாவட்ட காப்பாளர் கருப்பு சட்டை நடராஜன், பெரியகுளம் பகுத்தறிவாளர் கழக தலைவர் இப்ராஹிம் பாஷா, நகர செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, வழக்குரைஞர் காமராஜர், இளைஞரணி தலைவர் முத்துசாமி, ஒன்றிய செயலாளர் சென்றாயன், தேனி நகர தலைவர் ஓவியர் பிரவீன், கல்லுப்பட்டி ஆதித்தமிழன் ஆண்டிபட்டி அய்.ராஜா உள்பட ஏராளமான பகுத்தறிவாளர் கழக, திராவிடர்கழக தோழர்கள் கலந்து கொண்டனர். முடிவில் சா. முருகன் நகரப் பொருளாளர் பகுத்தறிவாளர் கழகம் சார்பாக நன்றியுரை வழங்கினார்.