23.7.2023
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
👉கலைஞர் பெண்ணுரிமை நலத்திட்டத்திற்கு தகுதி படைத்த அனைத்து பெண்களுக்கும் ஒருவர் கூட விடாமல், ரூ.1000 அளிக்கப்பட வேண்டும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
👉தாழ்த்தப்பட்டவர்கள் பாஜகவுக்கு வாக்களிப்பார்கள் என்பது தவறு. கருநாடகா, வங்காளத்தை பாஜக இழந்தது. பாஜகவும் தலித்துகளும் நெருப்பும் பனியும், நெருக்கமாக இருக்க முடியாது’ என பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் பேட்டி.
👉மணிப்பூரில் பெண்கள் மீதான தாக்குதலின் காட்சிப்பதிவு நம் ஆழ்மனதை உலுக்குகிறது. ஆனால் நமது எதிர்வினைகள், பிரதமர் உட்பட மணிப்பூர் அட்டூழியத்திற்கு உரிய விதத்தில் இல்லை என்கிறார் சிறப்பாசிரியர் பிரதாப் பானு மேத்தா.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
👉மேற்கு வங்க மேனாள் முதலமைச்சர் ஜோதிபாசு விற்குப் பிறகு, நீண்ட நாட்கள், 23 ஆண்டுகள் 138 நாட்கள், மாநில முதலமைச்சராக ஒடிசா மாநிலத்தின் முதலமைச்சர் நவீன் பட்நாயக் சாதனை படைத்துள்ளார்.
தி டெலிகிராப்:
👉மணிப்பூர் விவகாரத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பேச வேண்டும் என்று ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் வலியுறுத்தியுள்ளார்.
– குடந்தை கருணா