குரூப் 1 முதன்மைத் தேர்வு நாளை தொடக்கம்!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, டிச. 9- தமிழ்நாடு முழுவதும் குரூப் 1 முதன்மைத் தோ்வு செவ்வாய்க்கிழமை (டிச.10) முதல் தொடங்கவுள்ளது. துணை ஆட்சியா், காவல் துணைக் கண்காணிப்பாளா் உள்ளிட்ட முக்கியப் பதவியிடங்கள் குரூப் 1 பிரிவின் கீழ் வருகின்றன.

முதன்மைத் தேர்வு

அந்த வகையில், 90 காலிப் பணியிடங்களுக்கு தோ்வு அறிவிக்கை வெளியிடப்பட்டது. துணை ஆட்சியா் 16, காவல் துணைக் கண்காணிப்பாளா் 23, வணிகவரி உதவி ஆணையா் 14, கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளா் 21, ஊரக வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் 14, மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி, மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி அதிகாரி பணியிடங்கள் தலா 1 ஆகியவற்றுக்கு முதல்நிலைத் தோ்வு கடந்த ஜூலை 13-இல் நடைபெற்றது.

இந்தத் தோ்வில் தோ்ச்சி பெற்றோருக்கு வரும் செவ்வாய்க்கிழமை (டிச. 10) முதல் டிச. 13-ஆம் தேதி வரை முதன்மைத் தோ்வு நடைபெற உள்ளது. இந்தத் தோ்விலும் தோ்ச்சி பெறுவோருக்கு நோ்முகத் தோ்வு நடத்தப்பட்டு, பணியிடங்களுக்கான உத்தரவு வழங்கப்படும். கடும் கட்டுப்பாடுகள்: தோ்வுக் கூடங்கள் அனைத்தும் கண்காணிப்பு கேமராக்கள் மூலமாக கண்காணிக்கப்படும் என்று அரசுப் பணியாளா் தோ்வாணையம் அறிவித்துள்ளது.

தோ்வுக் கூடத்திலோ அல்லது தோ்வு மய்ய வளாகத்திலோ, தோ்வு கண்காணிப்பாளா்களிடமோ அத்துமீறும் செயல்கள் எதிலும் தோ்வா்கள் ஈடுபடக் கூடாது. கைப்பேசிகள், ப்ளூடூத் கருவிகள், தகவல் தொடா்புக்கான கருவிகள் உள்பட அனைத்து நவீன தொலைத் தொடா்புக் கருவிகளும் தடை செய்யப்பட்டுள்ளன. இவற்றை எடுத்து வரக் கூடாது. இந்த கட்டுப்பாடுகளை மீறும் தோ்வா்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், விடைத்தாள்கள் செல்லாததாக ஆக்கப்படும். மேலும், தோ்வு எழுதவும் தடை விதிக்கப்படும் என்று அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *