ஆடைகளுக்கு ஜி.எஸ்.டி.அய் உயர்த்தினால் ஒரு லட்சம் பேருக்கு வேலை பறிபோகும் என இந்திய ஆடை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஜி.எஸ்.டி.அய் 12%இல் இருந்து 28%ஆக உயர்த்தவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் உறுதியானால் சிறு, நடுத்தர நிறுவனங்களைப் பாதிக்கும் என அச்சங்கம் கவலை தெரிவித்துள்ளது. அதேநேரம், ரூ.1,000 வரையிலான ஆயத்த ஆடைகளுக்கான (5% ஜி.எஸ்.டி. உயர்வு) ரூ.1,500ஆக உயர்த்த பரிந்துரைக்கப்பட்டுள்ளதை வரவேற்றுள்ளனர்.