பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் சமூகப்பணித்துறை சார்பாக கிராமிய முகாம் – 2023 திருச்சி சிறுகனூர் பெரியார் புரா கிராமம் மற்றும் அதனைச் சுற்றி உள்ள கிராமங்களில் 30.10.2023 முதல் 03.11.2023 வரை அய்ந்து நாட்கள் நடைபெற்றது.
முதலாம் நாள்
சமூகப்பணித்துறை மாணவர்களின் கிராமிய முகாமின் துவக்கவிழா “குழந்தைகள் பாதுகாப்பும் பராமரிப்பும்” என்ற தலைப்பில் ரெட்டிமாங்குடியில் பஞ்சாயத்து அலுவலகம் அருகில் மாலை 6.30 மணிக்கு நடைபெற்றது. இந்நிகழ்வில் தொடக்கவுரையாக சமூகப்பணித்துறை இணைப் பேராசிரி யர் அ.ஆனந்த் ஜெரார்டு செபாஸ்டின் மக்களிடத்தில் குழந்தைகளுக்கான உரிமைகள் பற்றி விளக்கினார். இந்நிகழ்வில் ரெட்டிமாங்குடி ஊராட்சி மன்ற தலைவர், எம்.கே.தங்கவேலு தலைமை வகித்தார். சிறப்பு விருந்தின ராக சிறுகனூர் காவல் உதவி ஆய்வாளர் சுமதி மக்களிடம் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பது குறித்தும், குழந்தைகளுக்கான சட்டங்கள் குறித்தும் பேசினார். இதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக துணை வேந்தர் செ.வேலுசாமி மக்களிடையே பெரியாரின் கருத்து கள் குறித்தும் பெரியார் பெண்களுக்கான விடுதலை மற்றும் முன்னேற்றத்திற்காக செய்த பல்வேறு போராட் டங்கள் பற்றி எடுத்துரைத்தார்.
பின்னர் கருத்துரை வழங்கிய வாய்ஸ் அறக்கட்டளை நிறுவனர் கிரிகோரி மக்களிடையே இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை பற்றியும் இயற்கை விவசாய உற்பத்தியை பெருக்குவதின் முக்கியத்துவத்தை பற்றி பேசினார். இந்நிகழ் வின் முடிவில் சமூகப்பணித்துறை மாணவர்களின் விழிப் புணர்வு நிகழ்ச்சிகளும், நிகழ்ச்சிகளில் பங்கேற்ற குழந்தை களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.
இந்த முகாமின் காலை நிகழ்வாக “குழந்தைகளின் நலம் நாட்டின் வளம்” என்ற தலைப்பில் ரெட்டிமாங்குடி அரசு நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சமூகப் பணித்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் சூ.ஞானராஜ் அறிமுகவுரை ஆற்றினார். அவர் தமது உரையில் சமூகப் பணித்துறை செயல்பாடுகள் பற்றி எடுத்து கூறினார். நிகழ் வில் அமலோற்பவமேரி தலைமையேற்று தலைமையுரை வழங்கினார். இந்நிகழ்வில் திருச்சி அறம் மருத்துவமனை மனநல ஆலோசகர் செல்வி ரதிப்பிரியா சிறப்புரை ஆற்றி னார். அவர் குழந்தைகளிடம் பாதுகாப்பான தொடுதல், பாது காப்பற்ற தொடுதல் குறித்தும் மேலும் அவற்றை செய்முறை விளக்கம் அளித்தார். குழந் தைகளுக்கான பாதுகாப்பு எண் 1098 குறித்த விழிப்புணர்வு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் 100 க்கும் மேற்பட்ட குழந் தைகள் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து “மகிழ்வான பெற்றோர்” என்ற தலைப்பில் ரெட்டிமாங்குடி ஆற்றங்கரையில் ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு மதியம் 12.45 மணிக்கு நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் அன்பாண்டு ஸ்கோப்பு அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் இந்துமதி ராதாகிருஷ்ணன் குழந்தைகளிடம் பெற்றோர்கள் தற்காலத் தில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என விளக்கினார். இதில் 70 க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.
இரண்டாம் நாள்
முதல் நிகழ்வாக “ஒன்றிணைவோம், ஒருங்கிணைப் போம், உருவாக்கு வோம்” என்ற தலைப்பில் தச்சங்குறிச்சி யில் மங்கலமாத ஆலயத்தின் அருகில் மாலை 6.30 மணிக்கு நடைபெற்றது. இந்நிகழ்வில் சமூகப்பணித்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் சூ.ஞானராஜ் அறிமுகவுரையாற்றினார். இந்நிகழ் வில் ஊராட்சி மன்ற தலைவர் பொன்.தர்ம ராஜ் தலைமை வகித்தார். இருங்களூர் ஒருங்கிணைப்பாளர் ரொசாரியோ ஃப்ரேம் சிறப்புரையாற்றிய போது மக்களிடம் பெண்களின் முன்னேற்றத்தை பற்றியும் எவ்வாறு ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்பதையும் எடுத்து கூறினார். இந்நிகழ்வின் இறுதியில் சமூகப்பணிதுறை மாணவர்கள் விழிப்புணர்வு, கலைநிகழ்ச்சிகள் நடத்தினர். கலைநிகழ்ச்சி யில் கலந்து கொண்ட குழந்தைகளுக்கு பரிசு வழங்கப்பட் டது. இந்நிகழ்வில் 70 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இரண்டாம் நிகழ்வு: புறத்தாக்குடி ஆற்றங்கரையில் கிராம மக்கள் பங்கேற்பு மதிப்பீடு நடைபெற்றது. இந்நிகழ் வில் மகாத்மாகாந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணிபுரியும் பெண்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் வாய்ஸ் அறக்கட்டளை பயிற்சியாளர் கவிதா சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்வில் மாணவர்கள் கிராமவளங்கள் அங்கு நிலவும் பிரச்சினைகள் மற்றும் கிராம உட்கட்டமைப்பு வசதிகளை பற்றி அறிந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் 60க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
மூன்றாம் நாள்
முதல் நிகழ்வாக “உன்னத பூமி உனது கையில்” என்ற தலைப்பில் இருங்களூர் எஸ்.பி.ஜி.எஸ்.டி. ஜான்ஸ் ஆரம்ப பள்ளியில் நடைபெற்றது. இதில் சமூகப்பணித்துறை மாண வர்கள் பள்ளி வளாகம் தூய்மை செய்து வளாகத்தை சுற்றி மரக்கன்றுகள் நட்டனர். இந்நிகழ்வில் இருங்களூர் ஊராட்சி மன்ற தலைவர் வின்சென்ட் தலைமையேற்று முதல் மரக் கன்றை நட்டு துவக்கி வைத்தார். அவர் தமது உரையில் சமூகப்பணி மாணவர்களை குறுங்காடுகளின் பயன்களும் அதை எவ்வாறு உருவாக்குவது என்பதை பற்றியும் விளக்கினார்.
இரண்டாம் நிகழ்வு: இருங்களூர் எஸ்.பி.ஜி.எஸ்.டி. ஜான்ஸ் ஆரம்பள்ளி மாணவர்களுக்கு இயற்கை பாதுகாப்பு மற்றும் குழந்தைகள் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதற்கு அப்பள்ளியில் தலைமை யாசிரியர் இதழ்சா தலைமை வகித்தார். இதில் சமூகப்பணித் துறை உதவி பேராசிரியர் முனைவர் சூ.ஞானராஜ் சிறப்புரை ஆற்றினார். அவர் பேசுகையில் இயற்கையின் பாதுகாப்பின் முக்கியத்துவத்தையும், குழந்தைகளின் உரிமைகளை பற்றியும் விளக்கி கூறினார். மேலும் குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண் 1098 பற்றிய செயல்பாடுகள் குறித்து விளக் கினார். இந்நிகழ்ச்சியில் 50 க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்துகொண்டனர்.
மூன்றாம் நிகழ்வு: இருங்களூர் பஞ்சாயத்தில் 15 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள மழை ஈர்ப்பு மய்ய குறுங்காட்டில் சமூகப்பணித்துறை மாணவர்கள் பசுமைப் பயணத்தை மேற்கொண்டனர். இந்நிகழ்வில் இருங்களூர் ஊராட்சி ஒருங்கிணைப்பாளர் ரொசாரியோப்ரேம் குறுங் காடு அமைப்பு முறைகளை பற்றி விளக்கினார்.
நான்காம் நிகழ்வு: புறந்தாக்குடி பகுதியில் உள்ள புனித செபஸ்தியார் ஆலயம் அருகில் உள்ள அரங்கத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. இதில் சமூகப்பணித் துறை உதவிப்பேராசிரியர் முனைவர் சூ.ஞானராஜ் அறிமுக வுரை ஆற்றினார். இவ்விழாவிற்கு அப்பகுதி ஊராட்சி மன்ற தலைவர் வின்சென் தலைமையேற்று கிராம வளர்ச்சி திட்டம் குறித்து பேசினார். மேலும் வழக்குரைஞர் கே.சபரி நாதன் குழந்தைகள் பாதுகாப்பு சட்டங்கள் மற்றும் பொது பாதுகாப்பு சட்டங்கள் குறித்து சிறப்புரையாற்றினார். இதில் சமூகப்பணித்துறை மாணவர்கள் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடத்தினர். இந்நிகழ்வில் 70 க்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்துகொண்டனர்.
நான்காம் நாள்
முதல் நிகழ்வானது பி.கே.அகரம் வனத்துறை முகாமில் காலை 10.45 மணியளவில் சமூகப்பணித்துறை மாணவர்கள் விதைகள் ஆய்வு மய்யத்தை பார்வையிட்டனர். வனத் துறை முகாமில் வனச்சரக அலுவலர் கோகிலா மாணவர்களு டன் கலந்துரையாடி விதை ஆய்வு மய்யத்தை குறித்து விளக்கினார். அதன் பிறகு விதைகள் ஆய்வு மய்ய ஒருங்கி ணைப்பாளர் உமாசங்கர் விதைகளின் வகைகள் மற்றும் முளைப்பு திறன் பற்றியும் மரங்களின் வகைகள், விதைகள் எவ்வாறு சேகரிக்கப்படுகின்றன என்பதையும் பல்வேறு விதை ஆய்வுக்கூடங்களுக்கு அழைத்து சென்று 100 க்கும் மேற்பட்ட விதை வகைகள் பற்றி விளக்கினார். இதில் சமூ கப்பணித்துறை மாணவர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
இரண்டாம் நிகழ்வு: “குறைவான பயன்பாடு, மறுசுழற்சி, மறு பயன்பாடு” என்ற தலைப்பில் பி.கே.அகரத்தில் அரசு நடுநிலைப் பள்ளியில் நிகழ்ச்சி நடைபெற்றது. சமூகப்பணித் துறை உதவிப் பேராசிரியர் எஸ்.ஞானராஜ் அறிமுகவுரையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூகப்பணித்துறை செயல் பாடுகள் குறித்தும் விளக்கினார். அப்பள்ளி தலைமையாசிரி யர் முரளி இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். அடுத்தாக திருச்சி வனச்சரக அலுவலர் ரவி நெகிழிப்பையின் தீமை குறித்தும் மஞ்சள் பை பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தி னார். மேலும் மறுசுழற்சி, மறுபயன்பாடுகளின் தேவை குறித்து உரையாடினார். இந்நிகழ்வில் 80 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.
மூன்றாம் நிகழ்வு:
மூன்றாம் நிகழ்வானது சிறுகனூர் நட்புசிறார் இல்லத்தில் “மகிழ்வான கற்றல் மனநிறைவான வாழ்வு” என்ற தலைப்பில் மாலை 6.30 மணிக்கு நடைபெற் றது. இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர் கே.இந்துராணி கண்ணையன் தலைமை வகித்து உரை வழங்கினார். பின்னர் திருச்சி கியூமெட் மருத்துவமனையின் சமூகவிழிப் புணர்வு ஆலோசகர் தினேஷ்குமார் சிறப்புரையில் கல்வி மட்டுமே மனதையும் நாட்டையும் மாற்றும் எதிர்காலத் தேவைகள் எது என்பதை தெரிந்து கொண்டு கற்க வேண் டும் என்றார். மேலும் இந்நிகழ்வில் சிறார் இல்லத்து குழந்தை களுக்காக லால்குடி தமிழ் மேன்ஸ் வியர் உரிமையாளரிடம் நன்கொடையாக பெற்ற உடைகளையும், 75 கிலோ அரிசி யும் வாய்ஸ் அறக்கட்டளை மேரி அவர்களிடம் வழங்கப் பட்டது. குழந்தைகளுக்கு கலைநிகழ்ச்சிகள் மற்றும் விளை யாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. நிகழ்வின் இறுதி யில் சமூகப்பணித்துறை மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடத்தினர்.
அய்ந்தாம் நாள்
முதல் நிகழ்வாக அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி மாணவர்களால் எம்.ஆர்.பாளையத்தில் உள்ள தெருக்களின் வழியாக காலை 11.00 மணியளவில் “மன நலமும் உடல் நலமும்” என்ற தலைப்பில் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. மாணவர்கள் விழிப்புணர்வுப் பதாகைகளை ஏந்தியும், வாசகங்கள் கூறியும் பேரணியில் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் ஆத்மா மருத்துவமனை மனநல ஆலோசகர் கரன்லூயிஸ் கலந்துகொண்டார். இந் நிகழ்வில் சமூகப்பணித்துறை மாணவர்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பேரணியில் கலந்து கொண் டனர்.
அதனைத்தொடர்ந்து, 12.00 மணியளவில் அப்பள்ளியில் “உடல்நலமும் மனநலமும்” தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. சமூகப் பணித்துறை உதவி பேராசிரியர் சூ.ஞானராஜ் அறிமுகவுரை ஆற்றினார். அவர் தமது உரையில் மனதை எவ்வாறு ஒருங்கு ஒருநிலை படுத்துவது அதற்கான வழிமுறைகள் என்ன என்பதை விளக்கினார். அப்பள்ளியின் உதவி தலைமை ஆசிரியை இந்நிகழ்வை தலைமையேற்று நடத்தினார். சிறப்புரை யாற்றிய திருச்சி ஆத்மா மருத்துமனை மனநல ஆலோசகர் கரன்லூயிஸ் மாணவர்களிடம் மனம் பற்றியும் எண்ணம், செயல், சிந்தனை போன்றவற்றை எவ்வாறு கையாள வேண்டும் என் விளக்கினார். மனநலம் எவ்வாறு காப்பது என்பதையும் ஒருசில செய்முறைகளாக விளக்கி காட்டி மாணவர்களிடம் கூறினார். மேலும் உடல் வலிமையாக இருக்க சுகாதாரம், உணவு போன்றவற்றில் அதிக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் கூறினார். இதில் 100 க்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.
நிறைவு விழா
இந்த கிராமிய முகாமின் நிறைவு விழாவாக சனமங்கலத் தில் உள்ள அஞ்சல் அலுவலகத்திற்கு அருகில் “மது போதை மற்றும் மறுவாழ்வு” என்ற தலைப்பில் மாலை 6.30 மணிக்கு நடைபெற்றது. பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சி இயக்குநர் முனைவர் குமரன் தனது தலைமையுரையில் மக்களிடம் மது போதை அதனால் ஏற்படும் விளைவுகளை பற்றி விழிப்புணர்வு இன்றைய காலத்தில் மிக மிக அவசியமானதாக உள்ளது என்றார். இதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக ஆராய்ச்சி பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு துறை இயக்குநர் முனைவர் பாலகுமார் தன் உரையில் மக்களிடம் சிறு கதைகளைக் கூறி கல்வியின் முக்கியத்துவம் பற்றியும் கல்வி மட்டுமே நம்மை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும் என்றார். இதனைத் தொடர்ந்து லெனின் மற்றும் காந்தி கலை குழுவினரின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் விழிப்புணர்வு பாடல்கள் பாடியும் போதை இல்லா நாட்டை உருவாக்க வேண்டும் எனக்கூறி மக்களை சிந்திக்க தூண்டினர். வாய்ஸ் அறக்கட்டளை நிர்வாக பொறுப்பாளர் ஜேனட்ப்ரீத்தி அறக்கட்டளை செயல்பாடுகள் குறித்தும், நம்மாழ்வார் விவீத்து சென்ற செயல்பாடுகளையும் நினைவு கூர்ந்தார். சிறப்புரையாற்றிய பாரதிமோகன் திட்ட இயக் குநர், குடிபோதை மற்றும் மறுவாழ்வு மய்யம் காஜாமலை மகளிர் மன்றம் மக்களிடையே மதுபோதையினால் ஏற்படும் தீமைகள் குறித்தும் போதைக்கு அடிமையானவர்களை இலவசமாக மீட்கும் பணிகளை குறித்தும் விளக்கினார். நிகழ்வில் இறுதியில் சமூகப்பணித்துறை மாணவர்களின் சிலம்பாட்டமும், விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகளும் நடத்தினர். இந்நிகழ்வில் 200 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
இந்த கிராமிய முகாமை சமூகப் பணி துறையின் உதவிப் பேராசிரியர் முனைவர் சூ.ஞானராஜ் மற்றும் உதவிப் பேராசிரியர் த.அலமேலு மாணவர்களோடு தங்கி வழிநடத் தினர். பெரியார் புரா ஊரக வளர்ச்சி மய்ய இயக்குநர் (பொ) முனைவர் ஆனந்த் ஜெரார்டு மற்றும் சமூகப் பணித்துறை தலைவர் சு.பரமேஸ்வரன் ஆலோசனை வழங்கினர்.