உலகளவில் கடந்த 10 ஆண்டுகளில் பில்லியனர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக, சுவிஸ் வங்கி ஆய்வில் தெரியவந்துள்ளது. அதன் ஆண்டறிக்கையில், “2014இல் 1,757ஆக இருந்த பில்லியனர்களின் எண்ணிக்கை 2024இல் 2,682ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரையில் அவர்களின் எண்ணிக்கை 153இல் இருந்து 185ஆக அதிகரித்துள்ளது. அவர்களின் சொத்து மதிப்பு 905.6 பில்லியனாக உயர்ந்துள்ளது” எனக் கூறப்பட்டுள்ளது.