திருப்பத்தூர், டிச.8- திருப்பத்தூர் நகரில் திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழக அலுவலகம் திறப்பு, கற்பி பயிலகம் கட்டடம் திறப்பு, மண்டல தந்தை பெரியார் தொழிலாளரணி அமைப்பு கலந்துரையாடல் மற்றும் மாவட்ட கமிட்டி உள்ளிட பல்வேறு நிகழ்ச்சிகளில் 14.12.2024 அன்று காலை முதல் இரவு வரை கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் பங்கேற்க உள்ளார்.
இந்நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்த கலந்துரை யாடல் கூட்டம் மாவட்ட தலைவர் இல்லத்தில் நேற்று (6.12.2024) காலை 11 மணியளவில் மாவட்டத் தலைவர் கே.சி.எழிலரசன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாநில பகுத்தறிவாளர் கழக துணைப் பொதுச்செயலாளர் அண்ணா சரவணன், மாவட்டச் செய லாளர் பெ.கலைவாணன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சி.ஏ.சிற்றரசன், மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் சி. தமிழ்ச்செல்வன், நகர செயலாளர் ஏ.டி.ஜி.சித்தார்த்தன், கந்திலி ஒன்றிய தலைவர் பெ.ரா.கனகராஜ், மாவட்ட தொழிலாளரணி அமைப்பாளர் க.மோகன், சோலையார்பேட்டை நகர அமைப்பாளர் இராஜேந்திரன், சோலையார்பேட்டை ஒன்றியத் தலைவர் தா.பாண்டியன் ஆகியோர் பங்கேற்றனர்.