நமக்கெல்லாம் விபத்து நடக்காது என்ற குருட்டு தைரியத்தில் தான், பலரும் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுகின்றனர். ஆனால், 2023இல் நடந்த சாலை விபத்துகளில் மொத்தமாக 1,68,491 பேரும், தலைக்கவசம் அணியாத காரணத்தால் மட்டுமே 30,000 பேரும் பலியானதாக அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். விபத்து உங்களை மட்டுமல்ல, உங்கள் அன்புக்குரிய குடும்பத்தையும் பாதிக்கும். ஆகவே, உயிர்க்கவசமான தலைக்கவசம் அணியுங்கள்!