சென்னை, டிச. 7- புயல் வெள்ளப் பாதிப்பிலிருந்து விழுப்புரம் மாவட்டம் இயல்பு நிலைக்குத் திரும்பி வருவதால், அங்கு தயாரித்து வழங்கப்படும் உணவுப் பொட்டலங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்று மாநில வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலா் பெ.அமுதா தெரிவித்தார்.
நிவாரண உதவி
பெஞ்சால் புயலால் பாதிக்கப் பட்ட விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில், 5 கிலோ அரிசி, ஒரு கிலோ சா்க்கரை, ஒரு கிலோ பருப்பு உள்ளிட்ட பொருள்கள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
விழுப்புரம் தமிழ்நாடு நுகா் பொருள் வாணிபக் கழகக் கிடங்கில் நடைபெற்று வரும் இந்தப் பணிகளை பார்வை யிட்ட பின்னா், பெ.அமுதா கூறியதாவது:-
விழுப்புரம் மாவட்டத்தில் பெஞ்சால் புயலால் மிகவும் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டை தாரா்களுக்கு ரூ.2 ஆயிரம் நிவாரணத் தொகை, 5 கிலோ அரிசி, ஒரு கிலோ சா்க்கரை, ஒரு கிலோ துவரம் பருப்பு வழங்கும் பணி 5.12.2024 அன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதற்காக நியாயவிலைக் கடைகளில் டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது.
அரிசி, சா்க்கரை, கோதுமை உள்ளிட்ட பொருள்களை பாக்கெட் செய்து வழங்கும் பணி மாவட்டத்தில் விழுப்புரம், வி.சாலை, திண்டிவனம், செஞ்சி, கண்டாச்சிபுரம் ஆகிய பகுதிகளிலுள்ள தமிழ்நாடு அரசு நுகா்பொருள் வாணிபக் கழகக் கிடங்குகளில் நடைபெற்று வருகிறது.
இந்த பணிகள் 6 மண்டல மேலாளா்கள் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாளொன்றுக்கு 40 ஆயிரம் பாக்கெட்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. 2 அல்லது 3 நாள்களில் இப்பணிகள் நிறை வடைந்து, நியாய விலைக் கடைகளுக்கு அனுப்பி வைக்கப் படும்.
மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட குடியிருப்புப் பகுதிகளில் குடிநீா் வழங்கும் வகையில், மின் பாதிப்புகள் சரி செய்யப்பட்டு மின் இணைப்புகள் வழங்கப்பட் டுள்ளன. விவசாயத்துக்கான மின் இணைப்பு வழங்குவதற்காக மின் பாதிப்புகள் சரி செய்யும் பணிகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஓரிரு நாள்களில் அனைத்துப் பணிகளும் முடிக்கப்படும்.
பொதுமக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பி வருவதால், உணவுகள் சமைத்து வழங்கப் படுவது குறைந்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு 5.12.2024 அன்று 17 ஆயிரம் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்ட நிலையில், 6.12.2024 அன்று காலை அதன் எண்ணிக்கை 9 ஆயிரமாகக் குறைந்துள்ளது.
எந்தெந்த பகுதிகளில் இயல்பு நிலைக்குத் திரும்பாமல் மக்கள் தங்களுக்கு உணவுத் தேவைப் படுகிறது என்கிறார்களோ, அங்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் உணவுத் தயாரித்து வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது நெடுஞ் சாலைத் துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறைச் செயலா் ஆா்.செல்வராஜ், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளா் என்.சுப்பையன், மாவட்ட ஆட்சியா் சி.பழனி, மண்டல இணைப் பதிவாளா் பெரியசாமி, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக விழுப்புரம் மண்டல மேலாளா் மனோகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனா்.