அதானியை முதலமைச்சர் சந்தித்தாரா? அமைச்சர் வி.செந்தில் பாலாஜி மறுப்பு

viduthalai
2 Min Read

சென்னை, டிச.7- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதானியை சந்திக்கவே இல்லை. இந்த விவகாரத்தில் பொய் யான தகவலை பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மின்சாரம் மற்றும் மது விலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று (6.12.2024) வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது;-

அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

தொழில் அதிபர் அதானியை தமிழ்நாடு முதலமைச்சர் சந்தித்தது போலவும், அதிக விலைகொடுத்து அதா னியிடம் இருந்து சூரிய ஒளி மின்சாரம் பெற ஒப்பந்தம் போட்டிருப்பது போல வும் தொடர்ந்து எதிர்க்கட்சி களும், ஊடகங்களும் கற்பனை யான தகவலை கட்டுக்கதைகள் போல் வெளியிட்டு தெரிவித்து வருவதற்கு கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். முதலமைச்சர், அதானியைச் சந்திக்கவும் இல்லை. அதானி நிறுவனத்துடன் நேரடியாக சூரிய ஒளி மின்சாரம் பெற எந்த ஒப்பந்தமும் போடவும் இல்லை.

அ.தி.மு.க. ஆட்சியில் நிர்வாக ரீதியாகவும், நிதிநிலைமை ரீதியாகவும் முற்றிலும் சீர்குலைந்திருந்த தமிழ்நாடு மின்சார வாரியத்தை அடுத்தடுத்த நிர்வாகச் சீர்திருத்த மற்றும் ஆக்கப் பூர்வமான நடவடிக்கை மூலம், இன்றைக்கு தமிழ்நாடு மின்சார வாரியத்தை தலைநிமிர வைத்துள்ளவர் எங்கள் முதலமைச்சர். அதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் இப்படி அடிப்படை உண்மை கிஞ்சித்தும் இல் லாத பொய்க் குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பரப்பி வருவது அரசியல் பண்பாடு அல்ல.

நியாயம் இல்லை

“ஒவ்வொரு மாநிலமும் ஆண்டு தோறும் நுகர்கின்ற மொத்த மின்சாரத்தில் குறிப்பிடத்தக்க அளவு புதுப்பிக்கத்தக்க மின் சக்தியைப் பயன்படுத்த வேண்டும். தவறும் பட்சத்தில், அபராதம் செலுத்த வேண்டும்” என்ற ஒன்றிய அரசின் கட்டாய விதியின் 2020, 2021, 2023 ஆகிய ஆண்டுகளில் 2 ஆயிரம் ‘மெகாவாட்’ சூரிய ஒளி மின்சாரத்தை கொள்மு தல் செய்ய தமிழ்நாடு மின் சார வாரியம் ஒன்றிய அரசின் ‘சோலார் எனர்ஜி கார்ப்பரே ஷன் ஆப் இந்தியா’வுடன் ஒப்பந்தம் செய்துள்ளதே தவிர, எந்தவொரு தனியார் நிறுவனத்துடனும் அல்ல.

அதானி நிறுவனத்திடம் இருந்து ஒருயூனிட்சூரியஒளி மின்சாரத்தை ரூ.7.01-க்கு நீண்ட கால அடிப்படையில் பெற 2014இல் ஒப்பந்தமிட்ட அரசை விட்டுவிட்டு, 2021ஆம் ஆண்டு பொறுப்பேற்ற உடனே தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் அதானி நிறுவனத்துக்கு எதி ரான வழக்கைதிறம்பட நடத் திய தி.மு.க.அரசை, மின்சார வாரியத்திற்கு சாதகமாக, அதாவது ரூ.5.10-க்கு ஒரு யூனிட் மின்சாரம் என்னும் அள விற்கு சாதகமான ஆணையைப் பெற்ற அரசை குறை சொல்வது எந்த வகையிலும் நியாயமாகாது.

மேலும், தமிழ்நாடு அரசு கடந்த மூன்று ஆண்டு கால மும் மின்சார கொள்முதல் குறித்து எந்த ஒரு தனியார் நிறுவனத்துடனும் எவ்வித ஒப்பந்தமும் செய்து கொள்ள வில்லை என்பதை தெள்ளத் தெளிவாக தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

சட்ட நடவடிக்கை

முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் திரா விட மாடல் அரசில், மின்வாரியம் நிர்வாக ரீதியாகவும், நிதிச்சுமையில் இருந்தும் சீரடைந்து, ஏழை எளிய நுகர் வோரின் நலனைப் பிரதானமாக எண்ணி நல்லாட்சிக்கு இலக்கணமாகச் செயல்பட்டு வருவதை பொறுத்துக் கொள்ள இயலாமல், “அவரைச் சந்தித்தார்” “இந்தத் தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டார்” என்றெல்லாம் பொய்த் தகவல்களைத்தொடர்ந்து பரப்புவார்களேயானால், அவர்கள்மீது கடும்சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.

– இவ்வாறு அமைச்சர் வி.செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *