முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளப் பதிவு!
சென்னை, டிச. 7- “அண்ணல் அம்பேத்கர்அறிவொளியில் சமத்துவ சமுதாயத்துக்கான பாதையில் நடைபோடுவோம்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பதிவிட்டுள்ளார்.
அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளையொட்டி (6.12.2024) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு வருமாறு:–
“கற்பி, – புரட்சி செய், – ஒன்றுசேர்”
பெரும்பாலான மக்களின் உரிமைகளையும் – கண்ணியத்தையும் மறுத்த,இந்தச் சமுதாயத்தில் வேரூன்றிய சமூக அநீதிகளுக்கு எதிராக நம்மிலிருந்து உருவாகி எதிர்த்த புரட்சியாளர் அம்பேத்கருக்குப் புரட்சி வணக்கம்!
கல்வியின் மகத்துவத்தை உணர்த்தி, தனது பேரறிவால் சமத்துவத்துக்கும் நீதிக்கும் பாதை சமைத்தவர் அவர்!
தனது சிந்தனைகளால் நமக்கு உரமூட்டி – நம்மைப் பாதுகாக்கும் புரட்சியாளர் அம்பேத்கர் நம்முடைய வாளாகவும் கேடயமாகவும் என்றென்றும் வாழ்கிறார்! அண்ணலின் அறிவொளியில் சமத்துவச் சமுதாயத்துக்கான பாதையில் நடைபோடுவோம்!
-இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் பதிவிட்டுள்ளார்.