சிந்து சமவெளி நாகரிகத்தில் இருந்து கவுதம புத்தர் வரை மற்றும் அதன் பிறகும் இந்தியாவில் எந்த வொரு பார்ப்பனர் அரச மரபும் நிறுவப்படவில்லை.
சிசுநாக வம்சம், நாக வம்சம், நந்த வம்சம், மவுரிய, குப்தர்கள் குஷானர்கள், ஹொய்சாளர்கள், முதல் முகலாய ஆங்கிலேய ஆட்சி வரை அனைத்தும் பார்ப்பனர் அல்லாதவர்கள் மட்டுமே இருந்தன.
இடையிடையே பார்ப்பனர்கள் அரசாட்சியைப் பிடித்தனர். ஆனால், அவர்களால் தாக்குப் பிடிக்க முடிய வில்லை. அவைகள் வரலாற்றில் மவுரிய, அல்லது நந்த உள்ளிட்ட அரச மரபுகள் போன்று வரலாறு இன்றும் கூறாது. எடுத்துக்காட்டாக சுங்க அரசைக் கூறலாம்.
சுங்க வம்சத்தின் ஆட்சியாளர் புஷ்யமித்திர சுங்கன் பற்றி அனை வருக்கும் தெரியும். ராஜேந்திர பிரசாத் சிங் அவர்களின் கருத்துப்படி
புஷ்யமித்திர சுங்கன் பாரசீக – ஈரானிய ஆரிய வம்சத்தைச் சேர்ந்தவன்.
கடைசி மவுரிய மன்னர் பிருஹத்ரதவின் அவையில் முக்கியத் துவம் இல்லாத பதவியில் இருந்தார். மவுரிய ஆட்சியாளர்கள் பாரசீக, ஈரானிய ஆரிய மக்களை நிர்வாகத்தில் நிர்வாக அதிகாரிகளாக நியமிப்பது வழக்கமாக இருந்தது.
புஷ்யமித்திர சுங்கன் பதவி ஆசை கொண்ட தனது இன அதிகாரிகளை ஒன்று திரட்டி சதி செய்து பிருஹத்ரதவைக் கொலை செய்து மவுரிய வம்சத்தினை முடிவிற்கு கொண்டுவந்தார்.
அங்கிருந்து சுங்க வம்சம் துவங்கு கிறது. புஷ்யமித்திர சுங்கனுக்குப் பிறகு அவனுக்குப் பின் வந்தவர்களால் சாம்ராஜ்ஜியத்தை நிறுவ முடியவில்லை. காரணம், மக்கள் பார்ப்பனிய அதிகாரத்தை ஏற்கவில்லை. இதனால் சுங்கனுக்குப் பின்வந்தவர்கள் மீண்டும் பவுத்தத்தை போற்றத் துவங்கினர். அவர்களும் பவுத்த விகாரைகளைக் கட்டி பவுத்த, சமணத்தை ஆதரித்தனர்.
வரலாற்றில் முதல் பார்ப்பனர் அரச வம்சம் முளையிலேயே கிள்ளி வீசப்பட்டது. 1500-ஆண்டுகளுக்குப் பிறகு மவுரிய ஆட்சியாளர்களைப் போன்ற தவறை மராட்டிய சாம்ராஜ்ய மன்னர் சிவாஜி மகாராஜ் செய்தார்.
7 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு தெற்கில் சைவ வைணவமும், வடக்கே வேத மரபும் திணிக்கப்பட்டது, மக்கள் வர்ண முறையால் பிரிக்கப்பட்டனர். மக்கள் சக்தி சல்லி சல்லியாக பிரிக்கப்பட்டது. குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே ஆயுதம் எடுக்கவேண்டும் என்றும் குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே கல்வி கற்கவேண்டும் என்றும் பெரும் பான்மை சமூகத்தினர் அடிமைகளாக இருக்கவேண்டும் என்று ஆனது.கி.மு. 400 லிருந்து கி.பி. 7 ஆம் நூற்றாண்டுவரை சிந்துவைக் கடக்க முடியாத அலக்சாண்டிரின் வழிவந்தவர்களும் பெசாவரைத் தாண்டாத மங்கோலியர்களும், மத்திய ஆசிய நாடோடிகளும், துருக்கிய ஆட்சியாளர்களும், கி.பி.9ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு சிந்துவைக் கடந்தனர். கி.பி.10ஆம் நூற்றாண்டில் டில்லியைப் பிடித்தனர். சுமார் 1,100 ஆண்டுகளாக இந்திய தீபகற்பத்திற்குள் நுழைய முடியாத வர்கள் ஏன் 10 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு நுழைந்தார்கள் என்ற கேள்விக்கு பதில் டில்லியில் ஆட்சியில் உள்ள வர்களிடம் உள்ளது.
சத்திரபதி சிவாஜி தனது அரசின் நிர்வாகத்தில் பார்ப்பனர்களுக்கு அதிக முக்கியதுவம் கொடுத்தார். ஆலோசகரின் பதவி உருவாக்கப் பட்டு, இப்பதவிக்கு பார்ப்பனர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டனர். இந்த ஆலோசகர்கள் பேஷ்வா எனப்பட்டனர். சிவாஜியின் மரணத்திற்குப் பிறகு மராட்டிய ஆட்சியாளர்களிடையே அதிகார மோதல் நிகழ்ந்தது. இதை பேஷ்வாக்கள் பயன்படுத்திக் கொண்டனர்.
பிற்காலத்தில் பொம்மையாக்கி, பேஷ்வா அரியணையாகக் கொண்டு தங்களையே மராட்டிய சாம்ராஜ்ய ஆட்சியாளர்களாக மாற்றிக் கொண்டனர். பேஷ்வா பாஜிராவ் பூனாவில் தாழ்த்தப்பட்ட சில சூத்திர மக்களின் கழுத்தில் மண் கலயமும், இடுப்பில் விளக்குமாறும் கட்டி அணிய வைத்தார்.
இன்றும் பாரதிய ஜனதா கட்சி, ஆர்.எஸ்.எஸ். பார்ப்பன அரசியல் வாதிகளின் மேலாண்மை மண்ணின் மைந்தர்களான தாழ்த்தப்பட்ட, இதர பிற்படுத்தப்பட்ட அரசியல் தலைவர்களுக்கு இடையே இருக்கும் பிளவுகளைப் பயன் படுத்தியே அவர்கள் அதிகாரத்தைப் பறித்து வருகின்றனர். 7-ஆம் நூற்றாண்டு வரை இந்திய தீபகற்பத்திற்குள் எந்த ஒரு வெளிநாட்டவரும் கால் வைக்க முடியவில்லை. பவுத்த, சமண சமயத்தின் ஆதரவு ஆட்சிகள் இருந்தது.