சென்னை, டிச. 6- உயிர் காக்கும் மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளின் முக்கிய உற்பத்தியாளராக இருக்கும் இந்தியா, வளர்ந்து வரும் சுகாதார தேவையைப் பூர்த்தி செய்ய நல்ல நிலையில் உள்ளது என கோட்டக் மகிந்திரா அசெட் மேனேஜ்மென்ட் கம்பெனி லிமிடெட் நிறுவனம் 2025ஆம் ஆண்டிற்கான பங்குச் சந்தைக் கண்ணோட்ட அறிக்கையை வெளியிட்டுள்ளது.
வரவிருக்கும 2025ஆம் ஆண்டில் முதலீட்டாளர்கள் கவனிக்கக்கூடிய, கேபெக்ஸ் சுழற்சியின் மறுமலர்ச்சி, ஊடுருவல் நிதி சேவைகள், தொழில்நுட்பம் – புதிய கால சேவை சலுகைகள், நுகர்வு மற்றும் கிராமப்புற மறுமலர்ச்சி, சுகாதாரம், மற்றும் பல்வேறு முதலீட்டு கருப்பொருள்களை முன்னிலைப்படுத்தும் அறிக்கையை கோடக் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இதில் இந்தியப் பொருளாதாரம், மூலதனச் சந்தைகள் செல்லும் திசை சார்ந்து பேரியல் – பொருளாதாரக் கண்ணோட்டத்தையும் இது பகிர்ந்து கொண்டுள்ளது. அதிகரிக்கும் அரசாங்க செலவுகள், வலுவான நுகர்வுப் போக்குகள் நம்பிக்கையைத் தூண்டும் அதே வேலையில் தனியார் வங்கிகள், ஆட்டோ, டெலிகாம், பார்மா, அய்டி போனற் துறைகளில் வருமானத்தை அதிகம் பெற வாய்ப்புகள் உள்ளன என இந்நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் நிலேஷ்ஷா தெரிவித்துள்ளார்.
பிரான்சு அரசு கவிழ்ந்தது
அரசியல் நெருக்கடி காரணமாக, பிரான்சு அரசு கவிழ்ந்தது. நிதிநிலை பற்றாக்குறை சர்ச்சை காரணமாக பிரான்ஸ் பிரதமர் மைக்கேல் பார்னியர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி அடைந்ததால், ஆட்சி கவிழ்ந்துள்ளது. அதிபர் இம்மானுவேல் மேக்ரானும் பதவி விலகக்கோரி எதிர்கக்ட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. 20 ஆண்டுகளில் முதல்முறையாக பிரான்சு அரசு நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வி அடைந்துள்ளது.
வங்கி மோசடி:
தொழிலதிபருக்கு மரண தண்டனை
வியட்நாம் வங்கியில் டாலர் 12 மில்லியன் மோசடியில் ஈடுபட்ட பெண் தொழிலதிபர் மைலானுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. Van Thinh Phat என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தை நடத்தி வந்த அவர், 2012-2022 வரை போலி நிறுவனங்களை உருவாக்கியுள்ளார். அவற்றை காட்டி அந்நாட்டின் சைகோன் வணிக வங்கியை கட்டுப்படுத்தி, மோசடி செய்ததை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அதில் 75 விழுக்காடு தொகையை அவர் திருப்பி அளித்தால் தண்டனை குறைக்கப்படலாம்