திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின், மழலையர் பிரிவின் ப்ரீகேஜி முதல் யூகேஜி வரையிலான 90 மாணவர்கள், 25.11.2024 அன்று, திருச்சி, சிறீரங்கம் அருகில் உள்ள மேலூர் கிராமத்தில் அமைந்துள்ள வண்ணத்துப்பூச்சி பூங்காவிற்கு ஒருநாள் பயணமாகக் கல்விச் சுற்றுலா சென்றனர். இப்பூங்காவில் வண்ணத்துப்பூச்சி இனங்கள் இனப்பெருக்கம் செய்யும் தாவரங்கள், உண்ணும் தாவர வகைகள் என 300-க்கும் மேற்பட்ட தாவரங்கள் வளர்க்கப்பட்டு வருவதையும், வண்ணத்துப்பூச்சிகள் எப்படி உருவாகின்றன, மகரந்த சேர்க்கை நிகழ்தல் ஆகியவற்றை விளக்கும் ‘ஆம்பி தியேட்டர்’ உள்ளிட்ட இடங்கள் மற்றும் சிறுவர் விளையாட்டு பூங்கா, சிறு பாலங்கள், சிறுவர்களுக்கான படகுகள் இயக்கும் குளம், வெட்டுக்கிளி, பட்டாம்பூச்சிகள், வண்டுகள் மொய்க்கும் கல் மரம், நட்சத்திர வனம், புழுக்கூண்டு என பார்ப்பவர்களை வியக்க வைக்கும் வகையில் உள்ள பல்வேறு இடங்களைக் கண்டு, இரசித்து மகிழ்ந்தனர்.