கோபி மாவட்ட கழக காப்பாளர் இரா.சீனிவாசனின் 89ஆம் ஆண்டு (6.12.2024) பிறந்த நாள், சீனிவாசன்-பத்மாவதி இணையரின் 60ஆம் ஆண்டு (5.12.2024) வாழ்விணையர் ஏற்ற நாள் ஆகிய இரு நாள்களின் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2000 வழங்கப்பட்டது. நன்றி.
சீர்மரபினர் நலவாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம்
சென்னை, டிச. 6- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைப்படி, துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின் அவர்கள் அறிவுறுத்தலின்படி அமைச்சர் பெருமக்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, சிவ.வி.மெய்யநாதன் ஆகியோரின் வழிகாட்டுதல்படி, மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் மற்றும் சீர்மரபினர் நலவாரிய துணைத்தலைவர் இராசா அருண்மொழி ஆகியோரின் சீரிய முயற்சியால் விருதுநகர் மாவட்டத்தில் சீர்மரபினர் நலவாரியத்தில் உறுப்பினர் சேர்க்கைக்கான சிறப்பு முகாம்கள் நடைபெற இருக்கிறது.
முதற்கட்டமாக இராஜபாளையம் சட்டமன்றத் தொகுதியில் டிசம்பர் 14ஆம் தேதியும், அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் டிசம்பர் 21ஆம் தேதியும், திருச்சுழி சட்டமன்றத் தொகுதியில் டிசம்பர் 28ஆம் தேதியும் நடைபெற இருக்கிறது.
இராஜபாளையம் சட்டமன்றத் தொகுதியில் டிசம்பர் 14ஆம் தேதி சம்மந்தபுரம் – தேவர் திருமகனார் கலையரங்கம், திரவுபதியம்மன் கோவில் தெரு- பசும்பொன் தேவர் கலையரங்கம், சொக்கர் கோவில் – மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமண மண்டபம், சேத்தூர் – பசும்பொன் தேவர் கலையரங்கம், செட்டியார்பட்டி – வீராசாமி பள்ளி, அயன்கொல்லங்கொண்டான் – ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற இருக்கிறது.
கல்வியில், பொருளாதாரத்தில் மேம்பாடு அடைவதற்கான முயற்சியில் பங்கேற்று இவ்வாய்ப்பினை பயன்படுத்தி சீர்மரபினர் சமுதாய மக்கள் உறுப்பினர்களாக சேர்ந்து பயனடைய கேட்டுக் கொள்கிறேன் என சீர்மரபினர் நலவாரிய துணைத் தலைவர் இராசா அருண்மொழி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.