சென்னை, டி.ச. 6- தமிழ்நாடு, புதுச்சேரியில் 3 மாதங்களில் கிடைக்கக் கூடிய வடகிழக்கு பருவ மழை 2 மாதங்களில் கிடைத்துள்ளது. சமீபத் தில் கரையை கடந்த பெஞ்சல் புயலால் கிடைத்த மழைதான் இதற்கு முக்கிய காரண மாக இருக்கிறது.
2 மாதங்களில் இயல்பு மழையை எட்டியது
தமிழ்நாடு, புதுச்சேரியின் ஆண்டு மழைப் பொழிவில் வடகிழக்கு பருவமழை காலத் தில்தான் அதிக மழையை பெறுகிறது.அந்தவகையில் வடகிழக்கு பருவமழை காலத் தில் தமிழ்நாடு, புதுச்சேரி சராசரியாக பெறக் கூடிய அளவு என்பது 44.2 செ.மீ. ஆகும்.
அக்டோபர் மாதம் 1ஆம் தேதி முதல் டிசம்பர் மாதம் 31ஆம் தேதி வரையிலான இந்த 3 மாதங்களில் கிடைக்கக்கூடிய மழைப்பொழிவை வடகிழக்கு பருவமழை காலமாக கணக்கில் கொள்ளப்படுகிறது.
அதன்படி, நடப்பாண்டு வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கி 2 மாதங்களே முடிந் துள்ள நிலையில், தற்போதே 3 மாதங்களில் கிடைக்கக்கூடிய இயல்பான மழை அளவை இப்போதே தமிழ்நாடு, புதுச் சேரி பெற்றுள்ளது. நேற்று (5.12.2024) வரையிலான நிலவரப்படி, சராசரியாக 44.7 செ.மீ. மழை பதிவாகியிருந்தது.
3ஆவது சுற்று மழைப்பொழிவு
நடப்பாண்டு வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 15ஆம் ்தேதி தொடங்கிய நிலையில், முதல் 2 சுற்றுகளில் தமிழகம், புதுச்சேரிக்கு ஏமாற் றமே கிடைத்தது. அதன்பின்னர், பருவமழை காலத்தின் 3ஆவது சுற்று மழைப்பொழிவு கடந்த மாதம் (நவம்பர்) 20ஆம் தேதி தொடங்கியது. முதலில் மிதமான மழை எனத் தொடங்கி, காற்றழுத்த தாழ் வுப் பகுதி ஒன்று உருவாகி, அது பெஞ்சல் புயலாகவும் வலுப்பெற்றது.
இந்தபெஞ்சல் புயல் தமிழ்நாடு பகுதிகளை நோக்கி நகர்ந்து வரும் போதும், கரையை கடக் கும் போதும் கண்ணாமூச்சி ஆட்டம் காட்டியது. புயலால் கிடைத்த பெரு மழை தமிழ் நாட்டில் விழுப்புரம், திருவண் ணாமலை, கிருஷ்ணகிரி உள் ளிட்ட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பெரும் சேதத்தை ஏற்படுத்தி சென்று விட்டது.
பெஞ்சல் புயல்தான் முக்கிய காரணம்
பெரும்சேதத்தை ஏற்படுத்தி சென்றாலும், 3 மாதங்களில் கிடைக்கக் கூடிய மழை முன் கூட்டியே பெற்றதற்கும் இந்த பெஞ்சல் புயல்தான் முக்கிய காரணமாக அமைந்து விட் டது. இந்த புயல் காலத்தில் மட்டும் தமிழ்நாடு, புதுச்சேரி யில் சுமார் 15 செ.மீ.மழை வரை கிடைத்துள்ளது.
இன்னும் பருவமழை – முடிய 26 நாட்கள் முழுவதுமாக உள்ள நிலையில், வருகிற 10ஆம் தேதிக்கு பிறகு மழைக்கான சூழல் சாதகமாக இருப்பதால், இந்த ஆண்டு இயல்பைவிட சற்று அதிகமாகவே மழை பதி வாகும் என்பதில் சந்தேகம் இல்லை
சென்னையும் இப்போதே இயல்பு மழை அளவை எட்டி யிருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது. அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரையில் சென்னையில் 81 செ.மீ. மழை பதிவாகும். ஆனால் இப் போதே 84.5 செ.மீ. மழை பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.