தமிழ்நாட்டில் இயங்கும் ரயில்களுக்கு தமிழில் பெயர் வைக்க வேண்டும் என தி.மு.க. மக்களவை உறுப்பினர் தங்க. தமிழ்செல்வன் மக்களவையில் கோரிக்கை வைத்துள்ளார். தமிழ் நாட்டில் முன்பு ரயில்களுக்கு வைகை, பல்லவன், பொதிகை, சோழன், பாண்டியன் என அழகான தமிழ் பெயர்கள் வைக்கப்பட்டதாக சுட்டிக்காட்டிய அவர், தற்போது வந்தே பாரத், தேஜஸ், நமோ பாரத் என ஹிந்தியில் பெயர் வைக்கப்படுவதால் எளிய மக்கள் உச்சரிக்க சிரமப்படுவதாகவும், அதை தவிர்க்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.