ரயில்வேயை ஒன்றிய அரசு தனியார்மயமாக்க திட்டமிட்டு வருவதாக அவ்வப்போது செய்திகள் வெளியானபடி உள்ளன. இதனை மக்க ளவையில் எதிர்க்கட்சிகள் எழுப்பின. சமாஜ்வாதி மக்களவை உறுப்பினர் நீரஜ் மவுரியா பேசியபோது, ரயில்வேயை தனியாரிடம் ஒப்படைத்தால், ஏழை மக்கள் பாதிக்கப்படுவர் என்று கூறினார். திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் பாபி ஹல்தார் பேசியபோது, மூத்த குடிமக்களுக்கு மீண்டும் கட்டணச் சலுகை அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.