ஒழுகினசேரி, டிச. 6- கன்னியாகுமரி மாவட்ட திராவிடர்கழகம் சார்பாக நாகர்கோவில் ஒழுகினசேரியில் திராவிடர்கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி 92ஆவது பிறந்த நாள் விழா கருத்தரங்கம் நடைபெற்றது. பெரியார் மய்யத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் மா.மு. சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கோ.வெற்றி வேந்தன் முன்னிலை வகித்து உரையாற்றினார்.
பொதுக்குழு உறுப்பினர் ம.தயாளன் பகுத்தறிவாளர்கழக மாவட்ட தலைவர் உ.சிவதாணு, மாவட்ட துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள், காப்பாளர் ஞா.பிரான்சிஸ் மாநகர தலைவர் ச.ச. கருணாநிதி ஒன்றிய செயலாளர்கள் மா.ஆறுமுகம், மாவட்ட துணைச் செயலாளர் சி.அய்சக்நியூட்டன், கழக இளைஞரணி தலைவர் இரா.இராஜேஷ் செயலாளர் எஸ். அலெக்சாண்டர், திமுக தொழிற்சங்க நிர்வாகி க.வ. இளங்கோ, மாணவர் கழக அமைப்பாளர் இரா.கோகுல், கழகத் தோழர்கள் கோட்டாறு பகுதி தலைவர் ச.ச.மணிமேகலை, குமரி செல்வன், முத்துவைரவன், ம.செல்வராசு, கு.சந்திரன், பிரசாந்த், பெரியார் பற்றாளர்கள் பலரும் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.