காய்கறிகள் சாப்பிடுவதை விட மாமிசம் சாப்பிடுவதுதான் அதிகமான சீவகாருண்யம் ஆகும். எப்படி? உயிர் இருப்பதால் அது சீவனாகின்றது. சீவனை வதைத்துச் சாப்பிடுவது மாமிசமாகின்றது. ஆகவே ஒரு செடியின் தழைகளைக் கிள்ளிப் பிடுங்கும் போதும் அவைகள் படும்பாடு சித்ரவதைக்கு ஒப்பாகின்றதா இல்லையா? எனவே ஒரு சீவனைத் தினம் பல தடவை வதை செய்து அதைத் துன்புறுத்துகிறோம் என்பதை உணருகின்றோம் அல்லவா? இப்போதும் அதை நினைத்தால் சகிக்க முடியாத துக்கம் வருகிறது. ஆனால் மாமிசம் அப்படிஆகுமா? ஒரு சீவனைச் சாப்பிடுவதானால் ஒரு தடவைக்கு மேல் யாரும் தொந்தரவு செய்யமாட்டார்கள், அதுவும் நொடியில் முடிந்து போகும். ஆதலால்தான் கிழங்கு, கீரை, காய்கறிகளை விட மாமிசம் சாப்பிடுவது சீவகாருண்யம் என்பதில் என்ன தவறு?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’