தமிழ்நாட்டில் பெஞ்சல் புயலால் கடந்த நவம்பர் 30 அன்று அடாது பெய்த கன மழை காரணமாக வரலாறு காணாத அளவில், சென்னை உள்ளிட்ட அய்ந்து மாவட்டங்களில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பெஞ்சல் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக மாண்புமிகு மானமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு
பெரியார் மணியம்மை உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்
ரூ.2 லட்சமும், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் ரூ.2 லட்சமும்
மற்றும் திராவிடர் கழகம் அறக்கட்டளை ரூபாய் ஒரு லட்சமும் – ஆக மொத்தம்
ரூ.5 லட்சம் (அய்ந்து லட்சம்) நன்கொடையாக இணைய வழியில் வழங்கப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பெரியார் அறக்கட்டளைகளின் சார்பில் ரூ.5 லட்சம் நன்கொடை!
Leave a Comment