‘பேய்’ பிடித்ததாம்! பெண்ணைத் தாக்கிய பூசாரி!

1 Min Read

திண்டுக்கல், டிச.6- திண்டுக்கல் மாவட்டம் வேட சந்தூர் அருகே புற வழிச்சாலையில் உள்ள கிரா மம் காக்காதோப்பு. இந்தக் கிராமத்தில் உள்ள முனி யப்பன் கோவிலுக்கு ஒரு தாய், தன் மகளை அழைத்து வந்துள்ளார். அந்த இளம் பெண்ணிற்குப் ‘பேய்’ பிடித்ததாகக் கூறிய அக்கோவிலின் பூசாரி அந்த பெண்ணை கருங்காலிக்கட்டையைக் கொண்டு கடுமையாகத் தாக்கினார். ‘‘என்னை காப்பாற்றுங்கள்’’ என்று அந்த இளம்பெண் கதறி இருக்கிறார்.

மூடநம்பிக்கை நிறைந்த மக்கள்
‘‘அந்தப் பூசாரி ‘பேயை’த்தானே அடிக்கிறார். அந்தப் பெண்ணை அடிக்க வில்லையே’’என்று மூடநம்பிக்கை நிறைந்த மக்கள் வேடிக்கை பார்த்தனர். அப்போது அங்கு வந்த ஒரு பெரியவர் மட்டும் பூசாரியின் கையைப் பிடித்து அவரது கன்னத்தில் இரண்டு முறை அடித்தார். ஆனால், அந்த பூசாரி அவரிடம் இருந்து திமிறிக் கொண்டு, அந்த இளம்பெண்ணை தாக்கினார். மேலும் அந்த பெண்ணின் முடியைப் பிடித்து இழுத்து மண்டியிட வைத்துள்ளார்.

அந்தப் பெண்ணின் தாயையும் பக்கத்தில் வரக்கூடாது என்று கூறி யுள்ளார். இந்த நிகழ்வு வலைத்தளங்களில் வைலாகி வருகிறது. இளம் பெண்ணிற்குப் ‘பேய்’ பிடித்தது என்று கூறி பூசாரி தாக்கியதை அனைத்துத் தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். ஆனால், வேடசந்தூர் காவல்துறையினர் இதுவரை ஒரு வழக்குக் கூட பதிய வில்லை. இந்த நிகழ்வு வேடசந்தூர் பகுதியில் மட்டமல்ல, சமூக வலை தளத்தில் வைரலாகி அனை வரும் இந்நிகழ்வைக் கண்டித்துள்ளனர்.

பொதுவாக ‘பேய்’ பிடிப்பது தொடர்பாக மருத்துவ உலகம் இதனை ஒரு மனநோயாகவே பார்க்கிறது. இயல்புக்கு மாறாக செயல்படுவது, அபரிமிதமாக நடந்து கொள்வது, நினைவுகளை இழந்தவாறு காணப்படுவது போன்ற நடவடிக்கை களை மருத்துவத்துறையில் ஆளுமை சிதைவு என்று சொல்லப்படுகிறது. ‘பேய்’ பிடித்திருக்கிறது என்று கூறி பெண்களை கோவில் பூசாரிகள் அடிப்பது, தாக்கு வது சட்டப்படி குற்றமாகும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *