மதுரவாயல், ஜூலை 24– ஆவடி மாவட்டம், மதுரவாயல் பகுதி திராவிடர் கழகம் சார்பில் வைக் கம் போராட்ட நூற்றாண்டு விழா – முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா 22.7.2023 அன்று மாலை 6 மணிக்கு மதுர வாயல் மின்வாரிய அலுவலகம் அருகில் நடைபெற்றது.
மதுரவாயல் பகுதி தலைவர் சு.வேல்சாமி தலைமையில் பகுதி செயலாளர் சு.நாகராஜன் வர வேற்றார்.
ஆவடி மாவட்ட கழக செய லாளர் க.இளவரசன், இணைச் செயலாளர் உடுமலை வடிவேல், துணைத் தலைவர் வை.கலை யரசன், துணைச் செயலாளர் பூவை தமிழ்ச்செல்வன், மதுர வாயல் பகுதி கழக துணைத் தலைவர் அ.அண்ணாநிசார், தங்க.சரவணன் ஆகியோர் முன் னிலை வகித்தனர்.
ஆவடி மாவட்ட பகுத்தறிவா ளர் கழக துணைத் தலைவர் ப.ஜெயராமன் ஒருங்கிணைப்பில் ஆவடி ” புதிய காலம் ” கலைக்குழு தோழர்கள் வ.மதிவாணன் , ரத்னா, பறையிசை சதீஷ் ஆகி யோரின் பாடல்களுடன் நிகழ்ச்சி துவங்கியது.
சிறப்பு அழைப்பாளராக திருநெல்வேலி மாவட்ட கழக காப்பாளர் காசி கலந்து கொண்டு சிறப்பித்தார். தலைமை கழக அமைப்பாளர் வி.பன்னீர்செல் வம், ஆவடி மாவட்ட தலைவர் வெ.கார்வேந்தன் உரையாற்றிய பின் கழக துணைப் பொதுச் செயலாளர் சே.மெ.மதிவதனி சிறப்புரையாற்றினார்.
நிகழ்வில் மாநில திராவிட மாணவர் கழக துணைச் செய லாளர் செ.பெ.தொண்டறம், ஆவடி மாவட்ட கழக மகளிரணி தலைவர் பூவை செல்வி, மாவட்ட மகளிர் பாசறை தலை வர் சுகந்தி, செயலாளர் அன்புச் செல்வி, பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், மதுரவாயல் பகுதி கழக மகளிரணி தலைவர் நா.கீதா, செயலாளர் அ.ரிஸ்வானா, முகப்பேர் செல்வி, பூவை லலிதா, மதுரவாயல் கி.ரேகா, காமாட்சி, குன்றத்தூர் அலமேலு, பொதுக் குழு உறுப்பினர் பூவை தி.மணிமாறன், ஆவடி நகர கழக தலைவர் முருகன், செயலாளர் தமிழ்மணி, ஆவடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் கார்த்திகேயன், தென் சென்னை மாவட்ட துணைச் செயலாளர் அரும்பாக்கம் சா.தாமோதரன், குன்றத்தூர் திருமலை, சோமங் கலம் இனமாறன் ( எ) பாலமுரளி, முகப்பேர் முரளி, பூந்தமல்லி ஒன்றிய தலைவர் அனகை ஆறு முகம், செயலாளர் பூவை வெங்க டேசன், ஆவடி மாவட்ட இளை ஞரணி செயலாளர் ஏ.கண்ணன், அமைப்பாளர் இரா.கலைவேந் தன், பகுத்தறிவு பாசறை இரா. கோபால், அயன்புரம் துரைராஜ் கூடுவாஞ்சேரி மா.ராசு, படப்பை சந்திரசேகர், ஆவடி ரவீந்திரன், மதுரவாயல் மோகன், அபிநந்தன், தினேஷ்,, பெரியார் பிஞ்சுகள் அறிவுச் செல்வி (எ) கயல்வீனஸ், அன்புச் செல்வன் (எ) கெவின் ரிச்சர்ட், நிவேதா, சஞ்சனா, ரயான், தமிழ், இனியன், நன்னன், திருவேற்காடு மூர்த்தி, பாலச்சந்திரன், தமிழன் தாமஸ், வைரம், வி.சுகுமார் மற்றும் பல தோழர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இறுதியில் மதுரவாயல் பகுதி கழக அமைப்பாளர் கு.சந்திர சேகர் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.