மானாமதுரை, டிச. 5- மானாமதுரை அரசு மருத்துவமனையில் திடீர் மின்தடை ஏற்பட்டது. அரிவாள் வெட்டுக்காயம் அடைந்த யில்வே ஊழியரின் தலையில் பெண் மருத்துவ பணியாளர், அலைபேசி வெளிச்சத்தில் தையல் போட்டது தொடர்பான காட்சிப்பதிவு பரவி வருகிறது.
அரிவாள் வெட்டு
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கீழப்பசலை கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன். யில்வே ஊழியர். இவர் 3.12.2024 அன்று தன்னுடைய விவசாய நிலத்துக்கு சென்றார். அப்போது ஒரு கும்பல், பால முருகனை அரிவாளால் வெட் டியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு மானாம துரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அப்போது மருத்துவமனையில் திடீர் மின்தடை ஏற்பட்டது. ஜெனரேட்டரும் இயங்கவில்லை. அந்நேரத்தில் மருத்துவமனையில் மருத்துவ உதவியாளர் இல்லை எனவும் கூறப்படுகிறது.
வீடியோ வெளியாகி…
எனவே பெண் பணியாளர் ஒருவர், அலைபேசி வெளிச்சத்தில் பாலமுருகனுக்கு தலையில் தையல் போட்டது சர்ச்சையாகி உள்ளது. இது சம்பந்தமான வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
மானாமதுரை அரசு மருத்துவமனையில் 12 மருத்துவர்களுக்கு பதிலாக வெறும் 2 மருத்துவர்கள் மட்டுமே இருப்பதாகவும் மேலும் மருத்துவ உதவியாளர் (மருந்தாளுநர்) ஓய்வு பெற்று 2 ஆண்டுகள் ஆன நிலையில் புதிதாக நியமிக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட் டுகின்றனர்.
இந்தநிலையில்தான் பெண் மருத்துவ பணியாளர், தையல் போடும் நிலை ஏற்பட்டு இருப்பதாகவும் வேதனை தெரிவித்தனர்.
இது மக்கள் நல அரசா? ரயில் கட்டணத்தில் இனி யாருக்கும்
சலுகை கிடையாதாம்
புதுடில்லி, டிச. 5- ரயில் கட்டணத்தில் இனி யாருக்கும் சலுகை இல்லை என்ற நிலையில் ஒன்றிய அரசு திடமாக உள்ளது.
கட்டணச் சலுகைகள்
கரோனா காலத்தின் போது ரயில்வேயில் பயணக்கட்டண சலுகைகள் நிறுத்தப்பட்டது. பின்னர் நிலைமை சரியான பிறகு மாற்றுத்திறனாளிகளுக்கான சலுகை மட்டும் தொடர்கிறது. பிறருக்கான சலுகைகள் தொடரவில்லை.
இந்நிலையில் நாடாளு மன்ற மக்களவையில் நேற்று (4.12.2024) கேள்விநேரத்தின்போது ம.தி.மு.க.முதன்மைச்செயலாளர் துரை வைகோ மற்றும் சோலாப்பூர் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் பிரனிதி சுஷில்குமார் உள்ளிட்டோர் யில்வேயில் நிறுத்தப்பட்ட கட்டணச் சலுகைகள் பற்றி கேள்வி கேட்டனர். துரை வைகோ, முதியோர் மற்றும் பத்திரிகையாளர்களுக்கான சலுகைகள் பற்றியும், பிரனிதி விளையாட்டு வீரர்களுக்கு சலுகைகள் வேண்டும் என்றும் கேட் டனர்.
ரூ.56,993 கோடி மானியம்
இதற்கு ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினிவைஷ்ணவ் பதில் அளித்து பேசினார். அப்போது அவர், “நான் மீண்டும் மீண்டும் இதனை தெளிவுபடுத்துகிறேன். இந்திய ரயில்களில் பயணம் செய்யும் அனைத்து பயணிகளுக்குமே ஒன்றிய அரசு பயணக் கட்டணத்தில் சலுகை வழங்குகிறது. இந்த வகையில் ஒன்றிய அரசு வழங்கும் மொத்த மானியம் ரூ.56 ஆயிரத்து 993 கோடி ஆகும். ஒரு பயண சேவைக்கான கட்டணம் 100 ரூபாயாக இருந்தால், அதில் 54 ரூபாய் மட்டுமே பயணிகளிடம் வசூலிக்கப்படுகிறது. மீதி 46 சதவீதம் மானியமாக வழங்கப்படுகிறது. இந்த மானியத்துக்குள் அனைத்து பிரிவினரும் அடங்குகிறார்கள்” என்றார்.
இந்த பதிலின் மூலம் ரயில்வேயில் இனி யாருக்குமே சலுகை கிடைக்காத நிலை ஏற்பட்டு இருப்பதாக துரை வைகோ தனது அறிக்கை மூலம் தெரிவித்து இருக்கிறார். இதுபற்றிமேலும் அவர், “என்னை பொறுத்த வரை மூத்த குடிமக்களுக்கும், அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்களுக்கும் வழங்கப்பட்டு வந்த கட்டண சலுகை, சலுகையே அல்ல. அது அவர்களின் உரிமை. அதை வழங்க வேண்டியது ஒன்றிய அரசின் கடமை. இதனை தவிர்ப்பது இந்த நாட்டின் மூத்த குடிமக்களுக்கு ஒன்றிய பா.ஜனதா அரசு துரோகம் செய்வதாகவே இருக்கும்” என கூறியுள்ளார்.