மரக்கன்று நடுதல்
வல்லம்,டிச.5- வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் நிறுவனத் தலைவர் தமிழர் தலைவர் டாக்டர் கி.வீரமணி அவர்களின் 92ஆவது பிறந்த நாள் நிறுவனர் நாள் விழாவாக பெரியார் பாலிடெக்னிக் வளாகத்தில் நடைபெற்றது.
பிறந்த நாள் கொண்டாட்டத்தின் ஒரு நிகழ்வாக பெரியார் கல்விக்குழுமமும்; தஞ்சாவூர் A to Z ஸ்பெஷாலிட்டி மருத்துவ மனையும் இணைந்து 29.11.2024 மற்றும் 30.11.2024 ஆகிய நாட்களில் நடத்திய மருத்துவ முகாமில் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
மருத்துவ முகாம்
02.12.2024 அன்று காலை 10.00 மணியளவில் பெரியார் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் இப்பாலிடெக்னிக் முதல்வர் முனைவர் அ.ஹேமலதா, துணைமுதல்வர், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
02.12.2024 அன்று காலை 11.00 மணியளவில் இப்பாலிடெக்னிக் நிறுவனத் தலைவர் டாக்டர் கி.வீரமணி அவர்களின் ‘கல்விப்பணியும், சமுதாயப் பணியும்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் இப்பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர்; முனைவர் அ.ஹேமலதா தலைமையேற்று உரையாற்றினாா.
இப்பாலிடெக்னிக் கல்லூரியின் துணைமுதலவர் தி.விஜயலட்சுமி வாழ்த்துரை வழங்கினார். இப்பாலிடெக்னிக் பேராசிரியர் சு.அய்யநாதன் தமிழர் தலைவரின் ‘கல்விப்பணியும் சமுதாயப்பணியும்’ என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
கருத்தரங்கம்
கட்டட எழிற்கலை துறைத்தலைவர் கே.பி.வெள்ளியங்கிரி வரவேற்புரை வழங்கினார். முதலாமாண்டு துறைத்தலைவர் ப.சாந்தி நன்றியுரை வழங்க விழா இனிதே நிறைவுற்றது.