குடியேற்றம், டிச. 5- வேலூர் மாவட்ட திராவிடர் கழக மகளிர் அணி திராவிட மகளிர் பாசறை சார்பில் கலந்துரையாடல் கூட்டம் 24.11.2024 அன்று குடியாத்தம் புவனேஸ்வரி பேட்டை பெரியார் அரங்கில் நடைபெற்றது.
இந்த நிகழ்விற்கு மாவட்ட மகளிரணி தலைவர் ந.தேன்மொழி தலைமை ஏற்றார். இந்த நிகழ்வில் ச.இரம்யா மகளிர் பாசறை தலைவர் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட காப்பாளர் ச.கலைமணி நோக்க உரையாற்றினார். ச.ஈஸ்வரி மாவட்ட காப்பாளர் துவக்க உரையாற்றினார் .இந்த நிகழ்வை இராஜகுமாரி ஒருங்கிணைத்தார்.
ஆசிரியரின் பிறந்த நாளையொட்டி பெரியார் பிஞ்சு சந்தா வசூல் செய்து தமிழர் தலைவர் ஆசிரியரிடம் கொடுப்பது என்று தீர்மானிக்கப்பட்டது. கலைஞர் நூற்றாண்டு விழா, சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா ஆசிரியர் பிறந்தநாள் விழா ஆகிய மூன்றையும் ஒட்டி தெருமுனை கூட்டங்கள் நடத்துவது என்று தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. மேலும் ஒன்றியக் கிளைக் கழகங்களை உருவாக்குவது எனவும் முற்போக்குச் சிந்தனை கொண்ட மகளிரை வைத்து மணியம்மை சிந்தனைக் களம் உருவாக்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. புதிய பொறுப்பாளர்களோடு மாதந்தோறும் இல்லம் தேடி மகளிர் நிகழ்வுகளை சிறப் பாக நடத்துவது எனவும் மாதந்தோறும் ஒரு கலந்துரையாடல் கூட்டம் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி காணொலி மூலம் சிறப்புரை ஆற்றினார்.
இந்த நிகழ்வில் மாவட்ட காப்பாளர் வி.சடகோபன் அவர்களும் பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் இரா. அன்பரசன் உள்ளிட்ட கழகத் தோழர்களும் கழகத்தில் இனி தங்கள் செயல்பாடுகள் குறித்து கருத்து தெரிவித்தனர். புதிய மகளிரணி மகளிர் பாசறை தோழர்களை வேலூர் மாவட்ட தலைவர் வி.இ.சிவக்குமார் அறிவித்தார். புதிய பொறுப்பாளர்களுக்கு கழகத்தின் சார்பில் சிறப்பு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட செயலாளர் உ.விஸ்வநாதன் இளைஞர் அணி மாவட்ட தலைவர் இ.தமிழ்தரணி, விமலா, நகரத் தலைவர் சி.சாந்தகுமார், நகர அமைப்பாளர் வி.மோகன், ப.க மாவட்ட அமைப்பாளர் மா.அழகிரிதாசன், அ.ஜெ.ஓவியா, மகளிரணி, பெ.இந்திராகாந்தி, நகர ப.க தலைவர் பா.ஜீவானந்தம் இளைஞரணி யுவன்சங்கர், ப.க மாவட்ட துணைச்செயலாளர் பி.தனபால் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். மாவட்ட மகளிரணி செயலாளர் சி.லதா நன்றியுரை ஆற்றினார்.
புதிய பொறுப்பாளர்கள்
மாவட்ட மகளிர் அணி தலைவராக இரா.ராஜகுமாரி, மாவட்ட மகளிரணி துணைத் தலைவர் ச.கலைவாணி, மாவட்ட மகளிர் அணி செயலாளர் பெ.இந்திரா காந்தி, மாவட்ட மகளிரணி அமைப்பாளராக சி.லதா, மாவட்ட மகளிர் பாசறை தலைவராக ச.இரம்யா, மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் சு.வசுமதி மாவட்டமகளிர் பாசறை அமைப்பாளராக மரு.தி.அனிதா ஆகியோர் புதிய பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர்.