சென்னை, டிச. 5- சென்னை மண்டல மாவட்டங்களின், திராவிடர் கழக மகளிர் அணி, திராவிட மகளிர் பாசறை, இணைந்த கலந்துரையாடல் கூட்டம், 30.11.2024 அன்று சென்னை பெரியார் திடலில் மாலை 3.30 மணி அளவில் நடைபெற்றது.
கலந்துரையாடல் கூட்டத்திற்கு திராவிட மகளிர் பாசறை மாநிலச் செய லாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை தலைமையேற்று, பெரியார் பிஞ்சு சந்தாக்கள் சேர்ப்பு குறித்தும் தன்னுடைய பங்களிப்பு குறித்தும் உரையாற்றினார்.
திராவிடர் கழக மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, கலந்துரையாடல் கூட்டத்தின் நோக்கங் கள் குறித்தும், தமிழர் தலைவரிடம், அவரிடம் பிறந்த நாளையொட்டி மகளிர் அணி மகளிர் பாசறை சார்பாக பெரியார் பிஞ்சு சந்தாக்கள் அளிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும், தமிழர் தலைவர் அவர்கள் அறிவுறுத்தல் படி மாநில, மாவட்ட, பொறுப்பாளர்கள் அமைப்பது குறித்தும் உரையாற்றினார்.
துணைப் பொதுச் செயலாளர் சே.மெ.மதிவதனி, பெரியார் பிஞ்சு சந்தாக்கள் சேர்ப்பது குறித்தும் அவரது பங்களிப்பை குறித்தும் பேசி நிகழ்வில் கலந்து கொண்டார்.
நிகழ்வின் அத்தனை ஒருங்கிணைப்பு பணிகளையும், சுயமரியாதை பிரச்சார நிலைய இயக்குநர் பசும்பொன்னும், தோழியர் மரகதமணியும் சிறப்பாக செய்திருந்தனர்.
மழை காரணமாக நேரில் வர முடியாத நிலையில் மகளிர் தோழர்கள் பலரும் காணொலி இணைப்பு வழியாக கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் தங்கள் பங்களிப்பான பெரியார் பிஞ்சு சந்தாக்களை அறிவித் தனர்.
பிரச்சார செயலாளர் அ.அருள்மொழி உடல்நிலை சரியில்லாத நிலையில் தொலைபேசியின் மூலம் நிகழ்ச்சிக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்தார்கள். பெரியார் பிஞ்சு சந்தாக்களையும் அறிவித்தார்.
பெரியார் பிஞ்சு சந்தா அறிவிப்பு செய்த மகளிர் தோழர்கள்
பிரச்சார செயலாளர் அருள்மொழி-10, சே.மெ.மதிவதனி-5, பா மணியம்மை – 5, இறைவி – 5, பசும்பொன் – 10, பவானி -10, மரகதமணி – 5, நிரஞ்சனா அம்பேத்கர்-10, பெரியார் செல்வி-5, உத்ரா பழனிசாமி-2, நாகவல்லி முத்தையன்-5, செல்வி பூவிருந்தவல்லி-2, வெற்றிச்செல்வி-3, பொன்னேரி செல்வி-5, குமாரி பார்த்தசாரதி-1, மணிமேகலை சுப்பையா -3, பூங்குழலி -1, அருணா -1, சீர்த்தி -1, இளவேனில் அறிவுக்கரசு -1, மொத்தம் சந்தாக்கள் – 90.
இது முதல் தவணை ஆசிரியர் அவர் களின் வயது 92க்கு மேலும் சந்தாக்கள் சேர்ப்போம் என்ற உத்தரவாதத்தையும் மகளிர் தோழர்கள் அளித்துள்ளனர்.
தாமோதரனும், இசை இன்பனும் கலந்து கொண்டு காணொலி இணைப்பை சிறப்பாக செய்து கொடுத்தனர்.
கலந்துரையாடல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
சுயமரியாதை நாள் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் பிறந்த நாள் மகளிரணி மற்றும் திராவிட மகளிர் பாசறை சார்பாக டிசம்பர் மாதம் முழுமையாக கொண்டாடுவது,
தமிழர் தலைவர் அவர்களின் வழிகாட்டுதல்படி தொடர்ந்து இல்லம் தேடி மகளிர் சந்திப்பு நடத்துவது,
மகளிர் அணி, திராவிட மகளிர் பாசறை பொறுப்பாளர்களுக்கு தமிழர் தலைவர் அவர்களால் அறிவிக்கப் பட்டுள்ள பெரியார் பிஞ்சு சந்தா சேர்ப்பு பணியை மேற்கொள்வது,
மாவட்டங்கள் தோறும் மகளிர் அணி மகளிர் பாசறைக்கு பொறுப்பாளர்கள் நியமிப்பது. நிறைவில் பொன்னேரி செல்வி நன்றி கூறினார்.