கரூர், டிச.4 கரூர் மாவட்டம் தாந்தோணி மலை ஊரணி காளியம்மன் ஆலயத்தில் அய்யப்பா சேவா சங்கம் அறக்கட்டளையின் சார்பாக ஏழாம் ஆண்டு தீமிதி நிகழ்ச்சி நடைபெற்றது. காலை 7 மணிக்கு 7 கன்னிகளுக்கு அருள் அழைத்து நெய் விளக்கு ஏந்துதல் நிகழ்ச்சி நடைபெற்ற பின்னர் இரவு 7 மணி அளவில் அய்யப்ப பக்தர்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு தீமிதி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறுவர் சிறுமிகள் என இருபதுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு தீயை மிதித்தனர். இதில் பல குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டது. சிலர் அழுத குழந்தைகளை தூக்கிக் கொண்டு தீ மிதித்தனர். இறுதியாக ஏழு கன்னிப் பெண்கள் தீயை மிதித்தனர். இந்தக் கொடூர செயலை அய்யப்பா சேவா சங்கத்தினர் செய்திருந்தனர். பக்தி வந்தால் புத்தி போகும் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு.